Category Archives: தமிழீழக் கவிதைகள்

என் தேசம் எனது மக்கள் சார்ந்த வலிகளும் வருத்தங்களும் கோபமும்..

19 ஈழக் கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்…!!

போராடி; தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் – ஊர்திரும்பா வேதனையில் ஈழக் கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட – ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி – மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் – சொட்டிய ரத்தம் எப்படி … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

18 விடுதலையின் வெள்ளை தீ; பிரிக்கேடியர் சுப. தமிழ்செல்வன்!!

உன் வாழ்க்கை கதைநூறு சொல்லும் முகமோ அத்தனையையும் ஒற்றைசிரிப்பில் வெல்லும், காலம் உன் களப்பணியை நினைவில் கொள்ளும் தமிழர் வாழும்வரை உன்புகழும் நில்லும்! வானம் தொடுங் காலம்வரை சமரிலும் அரசவை படையிலும் நீயே தூணானாய்; எங்களின் காலம் சொல்லா தீர்ப்பிற்கு – உன் மரணத்தால் ஒரு தோல்விசாசனம் எழுதிப் போனாய்! மீண்டும் வெற்றிமுரசு கொட்டும்வரை ஓயாது … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

17 ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி!

மாலதி வீரவணக்க நாள் – அக்டோபர் 10 எம் விடுதலை போருக்கு நாங்கள் கொடுத்த கொடை – எம் மண்ணின் வீரம் வரலாற்றில் நிலைக்க விதைத்த முதல் தாய்விதை; மாலதி! பெண்ணின் வீரம் இதுவென்று சமரில் காட்டிய முதல் பெண்புலி; விடுதலைக்கு கனவு சுமந்தோர் மத்தியில் – களத்தில் இறங்கி உயிரை கசக்கியெறிந்த போராளி; மாலதி! … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

16 சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!

இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, ஈழதேசம் என் நாடென்று எல்லை தமிழனுக்கும் சொன்னவரே, எம்மின மக்களுக்காய் தன்னலம் துறந்தவரே, அண்ணன் தம்பி நீயென்று என் சனத்தொட வாழ்பவரே, லட்சியம் ஒன்றென்று சத்தியம் காத்தவரே, கத்தி கத்தி பேசி பேசி எம் அடையாளம் மீட்டவரே, சுட்டெரிக்கும் வார்த்தையினால் எதிரியை சுண்டி; சுண்டி … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

15 செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்………உறவுகளே!!

செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் – மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் – சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் – முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்