Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 68

வாழ்க்கையில் உணரும் ஆயிரம் – அர்த்தங்களுக்கு இடையில் மனம் எங்கோ.. யாரையோ.. எதற்கோ… தேடிக் கொண்டு தான் இருக்கிறது; நீ- மட்டும் தான் அடிக்கடி – இடையே வந்து என் தேடலின் அர்த்தத்தை நீயென்றுரைக்கிறாய்!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 67

உன் – ஈரமில்லா SMS முத்தத்தில் தான் நனைந்து நகர்கிறது என் – சிரிப்பினை மறந்த வெளிநாட்டு வாழ்க்கை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 63

நகர்ந்துக் கொண்டு தானிருக்கிறது நாட்கள்; குறைந்துக் கொண்டு தானிருக்கிறது – என் காலம்; வாழ்க்கையின் வலிய ஆட்டத்தில் – உனை சந்திக்க வேண்டிய நாட்கள் மட்டும் அதோ எங்கோ வெகு தொலைவில்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 66

விடாமழையில் நனைந்த ஈரம் போல் கவலையில் – நனைந்து கனத்த இதயமாகவே – என் பயணம்; சிரிப்பு நிம்மதி என்னும் முட்களின் மீதே நகர்கிறது – உன் பிரிவுக்குப் பின்..

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 65

வெகு நாட்களுக்குப் பிறகு – ஒரு சின்ன – மழைத் துளியில் உலகம் நனைந்த சந்தோஷம்; நீ இன்று குலுங்கி குலுங்கி சிரித்ததை தொலைபேசியில் கேட்டேன்!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக