Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஞானமடா நீயெனக்கு – 3

நீ – என் செல்லமா அப்பா செல்லமா எல்லோரும் கேட்கிறார்கள்; நாங்கள் தான் உன் செல்லமென அவர்களுக்கெப்படித் தெரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 2

நீ என் மடி மீது படுத்து பால் குடித்துக் கொண்டிருக்கிறாய்; நானுன் – மடியில் பிறக்கும் வரம் கேட்டு மீள்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 1

நீ சிரிக்கிறாயென நான் செய்ததையெல்லாம் வேறெந்த – பைத்தியக் காரனும் செய்திருக்கமாட்டான்; நிறைய – அப்பாக்கள் செய்திருக்கலாம்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 5 பின்னூட்டங்கள்

சண்டை + சண்டை = சுயநலம் (23)

கூறு கெட்ட மனுஷன் மேல; கூவம் நாத்தம் தாங்கல; மானங்கெட்ட மனுஷன் மேல கோபம் மட்டும் தீரல! மானம் ரோசம் கோபம் போச்சி சண்டை மட்டும் மிச்சமாச்சி.. சண்டை சண்டை சண்டை எங்கப் பார்த்தாலும் சண்டை… சோறு தின்ன சண்டை துணி எடுக்க சண்டை மாடு வாங்கி மேய்க்க சொன்னா அதிலும் – உன் மாடு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 10 பின்னூட்டங்கள்

கடல் எழுதும் கதை (21)

மனம் போல் அழகான – நீளமான கடல். கரை ஒதுங்கும் அலையின் சில்லென்ற ஈரத்தில் கால்வைத்து – இதயம் நனைத்துப் பூக்கும் நீலப் பூக்களுக்கிடையே.. கிரீச் கிரீர்ச்சென்று கத்தாத, பட்டாம்பூச்சிகளாய் இறக்கை அடித்துப் பறந்திடாத, மாறிமாறி வரும் அலைகளை விண்ணைத் தொடும் சந்தோசத்தில் தொட்டு தொட்டு – பூரித்த கைகால் முளைத்த தாமரைகளுக்கிடையே.. ஒரு கவிதை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்