Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ – 109

காசு கொடுத்து வாங்க இயலாத பொருள்களிலிருந்து தான் பூக்கிறது கனவு – வாங்கிய பொருள்களின் ஆசை தீர்ந்த சலிப்பிற்கிடையேயும்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 108

இன்னும் – நிறைய மண் மாளிகையாகாமலும், நிறைய துணிகள் நெய்யப் படாமலும், மனிதர்கள் – நிறையப் பேர் பக்குவப் படாமலும் தான் சுற்றுகிறது பூமி!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 107

வாங்கி வந்த நிறைய பொருட்கள் கீழே வீசிக் கிடக்கின்றன் வேறு சிலரின் கனவுகளை தாங்கி!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 106

கால நேர சம்பிரதாயம் பார்பவர்கள் வீட்டிலும் – பிணங்கள் விழாமலில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 12

கோடி நட்சத்திரங்களில் உயிர் பெற்றாவது ஒன்றாக நீயிருக்க மாட்டாயா…? உள்ளிழுக்கும் – உயிர்வரை சுவாசத்தில் சிறு காற்றாக நீயிருக்க மாட்டாயா…? பொங்கும் கடலெங்கும் – அலை முட்டும் கரையிலாவது – உன் காலடிச் சுவடுகள் தென்படாதா..? உயிர் குத்தி விழியசையும் காட்சிகளிலெங்கிலும் – நீயாக நீயாக – நீயாக இருக்கக் கூடாதா..? உயிர் கொள்ளும் இதய … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக