Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

‘ஹேப்பி பொங்கலி’ன் சப்தம்;

தமிழன் – மல்லாக்கப் படுத்து வானம் பார்த்து துப்பிய எச்சில் சிதறல்களில் – கேட்கிறது ‘ஹேப்பி பொங்கலி’ன் சப்தம்; திரும்பி படு தமிழா படுத்தது போதும் எழுந்து நில் நிமிர்ந்து வானம் பார் துள்ளி பூத்து பிரகாசிக்கும் – சூரிய வெளிச்சத்திற்கு – நன்றியறிவிக்கும் பொங்கலை பார்த்து பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல் எனக் கூவு…………. … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பணம் தின்னி; பட்டுப் புடவை (6)

பட்டுப் புழுவின் உயிரில் நெய்த ஆபரண ஆடை! ஆயிரம் லட்சம் உயிர்களை கொன்ற கொலை வியாபாரம்! என் ஏழை சகோதரிக்கு என்றுமே கிடைக்காத கனவு அவதாரம்! என் தாயை கொள்ளியில் வைத்த பிறகும் எரிந்திடாத பட்டுப் புடவை! ———————————- வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கு சமர்ப்பணம்

ஒரு வரலாற்றின் இரத்தம் பாய்ச்சி – உயிர் தந்த கோடியே; முடங்கிப் போன இனத்திற்கு முழக்கம் கொடுத்த – உயிர்மூச்சே; உலகின் எல்லை கோடு வரை ஈழம் – தலைநிமிர தலைமகனை தந்த வரமே; தேசியம் கற்பிக்க எங்கள் தேசியத் தலைவனை பெற்றெடுத்த பேரே; உன் மூடிய கண்களிலிருந்து எந்த சுதந்திரம் – எங்களுக்காய் பிறக்குமோ … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

வட்டியும் கிட்டியும் (5)

பணம் பணம்னு அலைந்ததுல பொணம் தின்னும் பொழப்பு பாரு; கந்து வட்டி கிந்து வட்டின்னு ஏழை ரத்தம் இனிக்கும் பாரு! சுட்ட உடம்பில் சூடு போடும் – மிருக குணம் தொழிலு பாரு; வாரமானா வந்து நிற்கும் மாடி வீட்டு மைனர் பாரு! கூரை – பிய்த்து பிய்த்து எறிந்ததுல – வீட்ட; உசத்தி கட்டி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

மிச்ச நாட்களின்; மீதி வாழ்க்கை!

ஒவ்வொரு இடமாக நகர்கிறது வாழ்க்கை; கேட்டது கிடைத்ததோ இல்லையோ தேவைகள் கூடி கூடி குறைத்துக் கொண்டே வருகிறது – நமக்கான உயிர்ப்பை! உள்ளும் புறமும் உண்மை ஒழித்து பொய்மையில் புழங்கிக் கிடக்கும் – நம் ஏதோ ஒரு கண்மூடி தனத்தில் தொலைந்து போகிறது மனிதனுக்கான யதார்த்தம்! மனம் சொல் சிந்தனை செயலென அத்தனையிலும் வீரியம் கொண்ட … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக