Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

சித்தனும் பித்தனும் இயற்கை (4)

பிரபஞ்சத்தின் நிர்வானத்திற்கு பசுமையில் கட்டிய பட்டாடை; மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை! ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம் உலகை அள்ளிப் பருகிடாத கொடை; சுடும் நெருப்பு – சுட்டெரிக்கும் சூரியன் கடும் பல நட்சத்திரச்ங்களை தாண்டி பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை; ஆலகால விசமும் பூக்கும் அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும் இடையே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

பெண்சிசு கொலை;செய்யலாம் செய்யலாம்!

என் பத்துமாத சுமப்பில் என் பிரபஞ்சமாய் பூத்தவளே; என் பெண்மைக்கு – நெற்றி பொட்டிட்டு எனை அம்மாவாய் பெற்றவளே; ஊர் தூற்றிய மலடிக்கு – உன் ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே; உயிர் பிரிந்து செல்கையில் – என் கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே; என் இரவுபகல் வலி தின்று – என் ரத்தத்தில் சமைந்தவளே; … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

ஆட்காட்டி; நாட்காட்டி (3)

சுவற்றில் ஆணியடித்த மூடர்களின் கடவுள்; நல்லநேரம் கெட்டநேரம் என்றெல்லாம் சொல்லி விளம்பரத்திற்காய் – வீடு வரும் பித்தன்; ராகுகாலம் எமகண்டமென்று ஏமாற்றும் சமூக சீர்கேடர்களின் கைக்கூலி; காசுவாங்கிக் கொண்டு அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் கால துரோகி! நாட்களின் நகர்தலை அளந்து காட்டுவதாலும் – நாளொரு தகவல் கொண்டு இயங்குவதாலும் மட்டுமே – பணம் கொடுத்து வாங்கிவரும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

ஐயப்ப சாமியும் – தீட்டும்

இருமுடி கட்ட புறப்படுகையில் எதிர்வீட்டு விதவை அக்கா எதிரே வந்தாள் – தீட்டுப் படவே-யில்லை ; தங்கை தலை ஊத்திக் கொண்டாளாம் வெளியே சென்று வீடு வருகையில் மறந்து வந்து – அண்ணாயெனக் கட்டிக் கொண்டாள் தீட்டுப் படவே-யில்லை ; நண்பர் – ரஃபியின் மனைவிக்கு குழந்தை பிறந்ததாய் சொன்னார்கள் தூர நின்று பார்த்து வரலாமென்று … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –71

வீடு சுத்தம் உணவு சுத்தம் பழக்க வழக்கங்கள் சுத்தமென இருந்த நாற்பத்தோராவது நாளில் மனிதருக்குள்ளிருந்த – சாமியை கண்டேனோ இல்லையோ சாமிக்குள் இருக்கும் மனிதம் தெரிந்தது! —————————————– வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக