Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ – 42

நீ என்னிடம் பேச துடிக்கும் உன் மனசை உன் பார்வையால் – மறைக்க முடிய வில்லை தான்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 41

நீ சற்று தள்ளி நின்று விடை பெறுவதாக சொன்னாய் இதயம் உனக்கு முன்னே ஓடி உன் – பார்வைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது பார்….

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 40

உன்னிடம் பேசிடாத வார்த்தைகளை கோர்த்துவைக்கிறேன் வெறும் கடிதமென கிழித்துவிடாதே!

Posted in எத்தனையோ பொய்கள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 39

உன் கடிதத்தின் முடிவில் – பிரிந்துவிடுவோமேன்று எழுதவா இவ்ளோ பில்டப்பு!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 38

வாசலில் தெளித்த உன் கண்ணீரில் ஈரமானது என் இதயம்!

Posted in சின்ன சின்ன கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக