Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ – 37

ஒரு பனைமர உயரத்திற்கு நெட்டி வீழ்கிறது – என் திருமணக் கனவு; முதிர்கன்னி!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 36

உன் கெட்டிமேள சப்தத்தில் – யாருக்குமே கேட்கவில்லை நான் கத்தி கத்தி அழுதது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 35

பத்து கொலை பன்னானாம் பதினோராவது கொலையில் திறமையாக பிடித்துவிட்டது போலிஸ்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 34

கடன் தொல்லையில் நூத்துக்கு பத்து வட்டியை தாண்டி தூக்கமும் போனதே!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 33

என் காதலை என்னை விட என் எழுதுகோல் – அழுத்தமாக சொல்கிறது; அதனால் இதோ – என் எழுதுகோல் உனக்கே பரிசாக!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக