Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ – 22

கற்காலத்திலிருந்து நெற்காலத்திற்கு வந்து பொற்காலமாக மாறுமென நம்பி நம்பியே முடிகிறது நம் காலம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 21

வழிக்க வழிக்க முளைக்கிறது தாடியும் சாதியும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 20

சுற்றி சுற்றி ஒரு கூடை பழம் விற்ற கிழவியின் சிரிப்பை திருடித் தான் கொள்கிறது கால்வலி!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 19

போ..போ.. நீ பார்க்கும் ஓரக் கண் பார்வையால் தான் என் பெயர் – தெரு பொருக்கி ஊதாரி’ யானது!.

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 18

ஒவ்வொரு – வெண்சுருட்டிற்குள்ளும் வெளியில் தெரியாமல் எரிகிறது எங்கோ பீடி சுழற்றும் ஒரு குழந்தை தொழிலாளியின் எதிர்காலம்!!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக