Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ – 27

சந்தேகத்தோடு பார்த்த கண்களுக்கு சூரிய வெளிச்சம் கூட சூனியம் ஆகிறது; நம்பிக்கையோடு வாழ்பவரின் வாழ்க்கையில் – சூனியமும் சூன்யம் கொள்கிறது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 26

உன் கண்ணும் என் கண்ணும் பேசி பேசியே தீர்கிறது உயிர் வாழ்தலை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 25

நீ பவுடர் பூசிக் கொண்டு எனை பார்த்து அழகு விசாரித்ததில் நான் தான் அழகானேன்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 24

சொல்லில் பொருளில் பேச்சில் எதிலுமே புரிவதில்லை வாழ்க்கை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 23

மேய்ந்து கொண்டிருந்த கோழியை துரத்திப் பிடித்து கழுத்தை அறுத்து தோலை உரித்து கண்டம் துண்டமாக வெட்டி வறுத்து தின்று விட்டு ஏப்பம் விடுகையில் கொலையற்று போகிறது ஒரு உயிரின் இழப்பு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக