Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

கட்டிலை உடைத்துவிடேன் காமம்..

விழித்திரைக் கிழித்து இதயம் கெடுக்குதே காமம், பல விளக்குகள் அணைத்து இருட்டினுள் அடைக்குதே காமம்; மனத்திரை அகற்றி மனிதரை நெய்யுது காமம், அது மிருகமாய் மாறிட உள்நின்றுச் சிரிக்குதே காமம்; விரகத்தில் எரிக்குது நிர்வாணம் புசிக்குது காமம், நிம்மதியை அழிக்குது – தெரிந்தே குடும்பத்தை யொழிக்குதே காமம்; காதல் காதல் என்றெல்லாம் பொய்யினுள் புதையுதே காமம், … Continue reading →

Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இரத்தச் சுவடுகள்..

தலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..

ஒரு பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன் வெறும் கவிதைப் பொறுக்கித் திரிகிறேன், கால்சட்டை ஓட்டையினுள் உலகை ரசிக்கிறேன் அதைத் தைக்காத கைமுறித்துக்கொண்டு – கவிதைக்குள் முடமாய்க் கிடக்கிறேன்; வாசலில் பூசணி உடைக்கிறேன் உள்ளிருக்கும் சாமிகளை கண்மூடிச் சபிக்கிறேன், காலத்தில் நல்லது கெட்டது பார்க்கிறேன் இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்; யாருக்கு யாரென்றுத் தெரியாமலே காதலில் உலகை … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | 4 பின்னூட்டங்கள்

60, ஒரு சொல் போகும் நேரம்..

எனக்கென்று பிறந்த ஒன்று இன்று எனைவிட்டுப் போகப்போகிறது; நான் சிரிக்கையில் சிரித்து அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது; நடக்கையில் நடக்கவும் உறங்கையில் உறங்கவும் சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று போகப்போகிறது வளரும்போதே உடன் வளர்ந்து எனை வளர்த்த தாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது அசிங்கம் பேசினாலும் சரி அவதூறு பேசினாலும் சரி செய்வது எதுவாயினும் … Continue reading →

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பிரியாத மனங்களிரண்டு பேசிக்கொண்ட நினைவுதனில்..

மனதிற்குள் மறக்காத முகம் அவளுடைய முகம்; இதயம் முழுதும் சுமக்கும் நினைவுகளில் சிரிக்கவும் அழவும் வைப்பவள் அவள் மட்டுமே; அவளுக்கும் எனக்கும் அன்று அப்படி ஒரு காதல் இருந்தது.. நான் அழுதால் அவள் அழுவாள் நான் சிரித்தால் அவளும் சிரிப்பாள் ஏனிப்படியிலேறி மேலிருந்து தலைகீழ்விழும் குழந்தையைப் போல மனசு மேலேறி மேலேறி மீண்டும் அவளின் காதலுள் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்