Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

41, மரணத்தின் மாறாத வாசனை – வித்யாசாகர்!

அது ஒரு கொடிய நாள் அன்று தான் முதன் முதலில் ஒருவரின் மரணம் பற்றி கேள்வியுற்றேன் அவர் இறந்துவிட்டார் என்றார்கள் இறப்பதென்றால் என்ன என்றேன் இறப்பதெனில் – இல்லாதுபோவதென்றார்கள் இல்லாதுயெனில் இங்கிருந்து இல்லாமல் போவதா அல்லது எங்குமே இல்லாதுப் போதலா? என்றேன் அறிவிருக்கா உனக்கு? தத்துவம் பேசுமிடமா-யிது? அவர் என்னை கடிந்துப் பேசி பின் முறைக்கவும் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40, இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம்!

மண்ணிற்கு சண்டையிட்ட வாள்களின் ரத்தம் இன்னும்  காய்ந்திடாத மனத்திரையில் விரிகிற காட்சிகளில் மரணமின்னும் நிகழ்கிறது மரணத்தின் பெயர்தான் கொலையில்லை; சொற்களின் வசியத்தில் அசைகின்ற தலைகளில் சரிதவறு சிந்திக்கப்படாத அங்கீகரிப்பில் நடக்கின்றன கொலைகள் – உயிர்போதலுக்குப் பெயர் மரணம் மட்டுமே; மண்ணுக்கும் பெண்ணுக்கும் வீங்கிய இதயம் தனக்கென்று துடித்து துடித்தே சுடுகாடுமுட்டும் அழுது புலம்புதலில் அடுத்தவன் ரத்தமோ … Continue reading →

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்..

அது ஒரு சொட்டு சொட்டான மரணம் வட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்டுவதும் மகிழுந்து வாங்குவதும் அப்படித்தான் – அது ஒரு சொட்டு சொட்டான மரணம்; அதிலும் போறாத காலம் வாங்கிய வண்டி பழுதுபட்டு வீழுமெனில் பணம் கட்டி மீட்பதைக் காட்டிலும் உயிர் விட்டொழிதல் கூடுதல் சுலபம்; வேறென்ன – வாழ்க்கையில் முதல் முதாலாய் வாங்கிய … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..

1 இன்று நாளை என வாங்க செருப்பில்லாமலே தேய்ந்த கால்கள் சில்லறையில் வாங்கிய ஊறுகாய் தவிர்த்து குழம்பு காணாத சோறு வளையிடாமலேயே வணக்கமிட்ட கைகள் தைத்த ஆடை உடுத்தாமலேயே சுருங்கிய தோல் பொட்டலம் பிரிக்கையில் மட்டுமேப் படித்த படிப்பு பாதுகை கைகடிகாரம் அலைபேசி வானொலி மிதிவண்டி ருசியான உணவு என – இன்னபிற எல்லாமே கனவாகவே … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | 3 பின்னூட்டங்கள்

33) கவிதையில்லாத பொழுது..

ஒரு நெடுமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து வேரறுபடும் நிலை; மண் வாரி முகத்திலெறிய நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய் உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்; உயிர் முடிச்சவிழ்ந்து துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில் ஒரு விளக்கு அணைந்த இருட்டு; அனல் காற்றில் வெப்பமேறி வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்