Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

41 கனடாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு எழுதிய கவிதை!!

புது யுகம் படைப்போம்!! ஓடி மறைந்து வாழ்ந்தது போதும் ஊர் மறந்து உறங்கியது போதும் உறவுகளை அறுத்துவிட்டு கதறியது போதும் பிள்ளைகளின் – சமாதிகளை கூட உடைத்தது போதும் எம் – பண்பினை மண்ணோடு மண்ணாக தொலைத்தது போதும்; வாருங்கள் உறவுகளே; புது யுகம் படைப்போம்; இனியேனும் இழந்ததை நமக்காய் மீட்போம்! விடுதலை விடுதலை யென்றே … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..

ஒரு சின்ன முத்தத்தில் இதயம் ஒட்டிக் கொள்ளவும் – உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது. நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும் பண்பின்  நகர்தலில் காதல் கற்கவும் – ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது.. முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது.. … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

68) முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!

போராட்டத்தின் – ஒவ்வொரு கிளையாய் தாவிச் சென்றதில்; உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி கிளைகள் தீர்ந்தப் பாடில்லை; ஒரு நாளைக் கடப்பதே போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க வருடங்களை – சிரிக்க மறுத்து சகித்துக் கொண்டே – கடக்கிறோம்; எதிரே வருபவர்களை யெல்லாம் தனக்கானவர்களாக எண்ணியும், கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் – நிரந்தர ஆசையில் உயிர்விட்டே மடிகிறதிந்த … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

39 தமிழால் தானுயர்வோம்..

தடதடவென உயிர் துடித்தொரு வீரதீர உணர்வெழுந்தொரு – மார்புகூடு பதைபதைத்தொரு – மானம் காக்க புயல்வரும் செயல் அதுபோல் – தமிழா; நாடு காக்க முடிவெடு முதல் மக்கள் காக்க துணிந்தெழு முதல் மண்ணின் வீரம் நரம்புப் புடைக்க திண்ணைப் பேச்சும் மண்ணை காக்க – தமிழா; வீரமறவன் குடித்த பாலின் வெற்றிக் கொண்ட பண்டைத் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., பாடல்கள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

67, ஒற்றுமையில்லா வனத்தின் வதை..

ஒரு கடல் தாண்டிய வனம்  தான் – நான்  வசிக்கும் காடு.. ஒற்றுமை எனும் கடல் தாண்டிய வனம் அது. சுயநல மரங்களும் மனிதரை விட அதிகம் மிருகங்களும் வாழும் காடு அது. மிருகங்களை தின்று மனிதர்கள் வாழும் அந்த வனத்தில் – கடவுளுக்கே பஞ்சமெனில் பாருங்களேன்!!!!!!! அங்கே – மழைக் கூட லஞ்சமும் ஊழலுமாகத் … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்