Category Archives: கவிதைகள்

அரைகுடத்தின் நீரலைகள் – 3

மனிதர்களின் மனசாக என்றோ எங்கோ பிரிந்து போன உறவின் மறுதோன்றலாகவே நீயும் நானும் இருக்கிறோமென்பது தெரியாதவரை – இதையத்தை கொடுப்பதாகயெல்லாம் பிதற்றுகிறது தான் மனசு! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 2

போர்வீரர்கள் யாருமே சாகாதவர்கள் நமக்காக உயிர்தியாகம் செய்து நம்மோடு – வாழ்பவர்கள் என்பதை ஒத்துக் கொள்ளும் நாம் எப்படியோ எதிரி நாட்டின் வீரர்களை மட்டும் கொண்று விட்டதாகவே சொல்லி வெற்றிக் கொடி ஏற்றுகிறோம்! கொடியில் தெரியாத ஒரு உயிர் வண்ணங்களுக்கிடையே கலந்து இறந்த எல்லோரையுமே நினைவில் கொண்டுக் கொள்கிறது!! ——————————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள்.. (1)

எவனெவனோ கேட்டானாம் லஞ்சம் கொடுத்தது நீயும் நானும் செய்த வஞ்சம், ஊரெல்லாம் நடக்கிறது கொள்ளை வீட்டில் சேர்த்த சுயநலத்தின் தொல்லை, காலமெல்லாம் பரிதவிக்கிறான் மனிதன் மனிதம் மறக்கப் பட்ட இரும்பன், உலகெல்லாம் கொட்டிக் கிடக்கிறது வாழ்க்கை எதற்கெல்லாமோ அஞ்சித் தவிக்கிறது மனசு, செய்யாத கொடுமைக்கு இல்லை தண்டனை செய்த தவறிலிருந்து இல்லை தப்பித்தலும், உடம்பெல்லாம் ஆசையும் … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பிறப்பின் முதலெழுத்து; அப்பா!!

அன்றெல்லாம் அப்பாவின் கைபிடித்துச் சென்றே உலகம் பார்த்த வியப்பு.. அப்பா.. நடக்கும் தெருவெல்லாம் வாழ்வின் பாடங்களை கற்பிப்பார்.. வானத்தின் மேகப் பூக்களை கூட யானையாகவும் குதிரையாகவும் பார்க்க சொல்லி வளர்த்த அப்பாக்கள் எப்படியோ மறந்தே போகிறது – பிள்ளைகளுக்கு(?)!! மீன் வாங்கினால் பூ வாங்கினால் தெருவில் பழம் விற்கும் மூதாட்டியிடம் பழம் வாங்கினால் கூட அவர் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 60

உனக்கு விரல் வத்தல் பிடிக்குமென்று நிறைய வாங்கிவந்தேன் போதுமானதை தின்று விட்டு மீதியை வீடெல்லாம் கொட்டி இரைத்தாய் அளவுக்கு அதிகமானால் எல்லாமே இப்படித் தான் என்றதில்; எனக்கும் நீ ஞானமானாய்!! ———————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக