Category Archives: கவியரங்க தலைமையும் கவிதைகளும்

எஸ்.ஆர்.எம் கல்லூரியின் நிறுவனர் திரு. பாரிவேந்தரோடு விழா.. (1)

தூரிகை கொண்டு வரைய வரைய முழுமைபெறும் ஓவியம்போல் நம் நாவினிக்கப் பேசி பேசி தூய்மைகொள்ளும் தமிழுக்கு வணக்கம்!! —————————————————————— பூச்சொரியப் புன்னகைக்கும் படைத்தவனுக்கீடாய், பாத்தொடுத்து பண்ணிசைக்க வரலாறாய் வாழும், பட்டிதொட்டி கிராமமெல்லாம் பள்ளிப்படிப்பாய் மீண்டு; எம் ஏற்ற விலங்கை உடைத்தெறிய விண்ணப்பமிட்டேன்’ —————————————————————— வாள்சுழற்றி வண்டமிழன் ஆண்ட மண்ணில் இன்று – கல்லூரி நிரப்பி; நமைக் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை)

சாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே தெரிகிறதந்த உலகம்; உலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன் அங்கே தமிழை ஆங்கிலம் கலந்துப் பேசுவோரையெல்லாம் முதலாய்ச் சபிக்கிறேன், சபித்த மனம் சற்று நடுநடுங்க – உணர்வூசி வைத்து இதையமெங்கும் குத்துகிறேன், உலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து என் முகத்தில் காரி உமிழ்கிறது’ மானங்கெட்ட மனிதனே என்கிறது’ … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..

(குவைத், அறிஞர் அண்ணா நினைவரங்கத்தில் பாடிய கவிதை) என் தமிழுக்கு எதிர்வரும் குரலை தட்டிக் கலைகிறேன், ஒரு தூசென மதிக்கிறேன், நெஞ்சு நிமிர மார்தட்டும் மொழிசப்தத்தில் கர்வம் கொள்கிறேன், பிடி வீரம் உண்கிறேன், நஞ்சு நீயென ஒதுக்கி – வெறுக்கும் மனிதரின் உறவறுக்கிறேன், எடுத்து தலைவெட்டிப் போடாததொரு கோபத்தை உள்ளே எரிக்கிறேன், உணர்வுக்குள் அடக்கி அடக்கி … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை )

உறவுகளுக்கு வணக்கம், தமிழர் காதுகளில் அன்று தூர்தசன் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பின் வழியாக ஒலித்துக்கொண்டிருந்த அந்தக் குரல், திரு. செந்தமிழரசு ஐயா எனும் குவைத் தமிழரிடையே பெருத்த மதிப்பினைக் கொண்ட அந்தக் குரல், காதினிக்கப் பாடி அறிவு செறிவுபெற பேசுமந்தக் குரல் குவைத்தைவிட்டு மீண்டும்  தமிழகத்தை நோக்கிச் செல்ல இருக்கையில் அதற்கு பிரிவுபச்சார விழா எடுத்து, வாலியின் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)

எனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்! மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்! நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்