Category Archives: விடுதலையின் சப்தம்

என் வலிக்களின் வடுக்கள்..

52 ஒரு தமிழனின் கனவு!!

குண்டு வெடி சப்தத்திற்கோ பீரங்கியில் சிதைந்து போகும் மரணத்திற்கோ பயமில்லை; இறந்து கொண்டிருப்பது வெறும் போராளிகள் மட்டுமல்ல எங்களின் நம்பிக்கையுமென்பதே பயம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

51 ஒரு தமிழனின் கனவு!!

இறந்தவர்களுக்கு இறந்த பின்பும் நிறைய கடிதங்கள் எழுதப் படுகின்றன; பதிலாய் வரும் அத்தனை கடிதத்திலும் ஒற்றை சொல்லே வருகிறது; மீண்டும் மீண்டும் போராடுங்கள்.. போராடுங்கள்..

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

50 ஒரு தமிழனின் கனவு!!

இதுவரை வீடிழந்து நாடிழந்து விடுதலை தேடி திரியும் எம் உறவுகளே; உயிரை யாருக்கு வேண்டுமாயினும் விட்டுவிடுங்கள்; விடுதலை உணர்வை – ஈழத்திற்கு மட்டுமாய் மிச்சம் வையுங்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

49 ஒரு தமிழனின் கனவு!!

ரத்தம் ஊறிய மண்ணில் ஓர் தினம் புலிக்கொடி – பட்டொளி வீசிப் பறக்கும்; இது கனவென்று நினைக்கிறார்கள் சிலர்; ஆம் கனவு தான் தமிழனின் கனவு!!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

46 எம் வீர காவியம் நின்னு கேளுடா; ஈழம்!

எம் வீர காவியம் நின்னு கேளுடா ஈழமுன்னா வெறும் மண்ணு இல்லைடா.. புலி கொடி பறந்து ஆண்ட தேசம்டா உலகை; இன்றும் தாங்கும் ஒற்றை இனமடா! பெண்ணைத் தாயென பார்த்த பூமிடா வந்தவரெல்லாம் வாழ்ந்த மண்ணுடா; பொண்ணும் பொருளும் நிறைந்த சொர்க்கம்டா போட்டதை எல்லாம் விளைத்த வர்கம்டா..! காலம் ஏனோ மாறி போச்சிடா கயவர்களாலே ஆடி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்