உறக்கத்தை துளைத்தேனடி
உண்பதும் மறந்தேனடி
பித்தனாய் அலைந்தேனடி – உனை
நினைப்பதொன்றையே ரசித்தேனடி;
உன் நினைவுகளின் ஈரத்தில்
இதயம் நனைந்தேனடி
உன் இமையின் அசைவில்
தொலைந்தேனடி;
உன் உடம்பின் வளைவுகளில்
வீழ்ந்தேனடி
பின் ஒரேயொரு புன்னகையில்
உயிர்த்தேனடி;
வார்த்தைகளில் காதலை
வடித்தேனடி
காதலை சொல்ல கூட
கவிதையாக மட்டுமே
கறைந்தேனடி!
——————————
























