உடைந்த கடவுள் – 14

மூச்சுமுட்ட
சோறு தின்று
விடும் ஏப்பத்திற்கு தெரிவதில்லை
பத்து நாள் பட்டினியின்
கொடுமை;

பத்து பைசா தட்டில்
போட்டுவிட்டால் போதும்
ஏப்பத்தின் சப்தம் –
எல்லோருக்கும்கேட்கலாம்!!
————————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 12

ரு ‘கிலோ’ கத்தரிக்காய்
இரண்டு ரூபாய்;

இரண்டு ‘கிலோ’ உப்பு
ஒரு ரூபாய்;

ஒரு ‘கிலோ’ பருப்பு
பத்து ரூபாய்;

பத்து ‘கிலோ’ அரிசி
நானூறு ரூபாய் – என்று
கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும்
வாங்குவோருக்கும் –
‘கிலோ’ தமிழ் என்றே தெரியப் பட்டுள்ளது!
————————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1) GTV – நிலவரம் நிகழ்ச்சியில்; நம் கட்டுரை!

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

ம் “மே- 18 அல்ல; மொத்த தமிழருக்கான தீர்வு இது” என்ற கட்டுரை ஒன்று GTV – இல் ‘நிலவரம்’ என்னும் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துப் பேசப் பட்டுள்ளது. அதன் ஒலிஒளிநாடாவும், அதற்கான இணைப்பும் இங்கே கொடுக்கப் படுகிறது..

அதோடு, தன் மிக இனிய குரலில், நல்ல உச்சரிப்பில், நம் படைப்பை உலக மக்களிடம் கொண்டு சேர்த்த சகோதரி றேனுகா மற்றும் GTV-க்கும், உங்களுக்கும் ‘நம் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!

மிக்க அன்புடன்..

வித்யாசாகர்

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

ழுத எழுத
இசையானாய்..

எழுதாமலே
கவியானாய்..

உயிரென்று சொல்லி
உறவானாய்..

உறவில் –
காதல் நட்பு தாண்டி ஏதேனும் ஒன்று
புனிதாமாகுமெனில் –
அதுவாக கரைவோம் வா!!
——————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

34 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

ன் மொத்த உணர்வின்
வெப்பத்தில் –
மொழியை பூத்தவளே.. வா..

உன் தனிமையை விரட்டி
தாகமொழிப்போம்,

சுடும் நெருப்பில்
ஊற்றிய நீர் போல
ஒரு சின்ன சிரிப்பில்
கலப்பில் –
புன்னகையாய் மலர்வோம் வா..
————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக