அதோ அந்த
மரத்தடியில்
கொஞ்சம் அமர்ந்து
போவோம் வா..
மரக் காற்றின்
நினைவுகளில்
நம்மை காதலர்களாய்
நினைவு கொண்டிருக்கும் மரம்!!
——————————————–
அதோ அந்த
மரத்தடியில்
கொஞ்சம் அமர்ந்து
போவோம் வா..
மரக் காற்றின்
நினைவுகளில்
நம்மை காதலர்களாய்
நினைவு கொண்டிருக்கும் மரம்!!
——————————————–
எத்தனையோ இலைகள்
உதிர்ந்துக் கொண்டே
இருந்தும்;
ஏதோ ஒரு இலையில்
மையம் கொண்டு மனசு
விழாதென்று நம்புவதாகவே –
தோற்கும் நிறைய பேரை பார்த்தும்
நாம் மட்டும்
தோற்கமாட்டோம் என்றே
நம்புகிறது நம் காதல்.
நம் காதலின் வெற்றி
சேர்தலில் மட்டுமல்ல
நாம் பிரியாதலிலுமென்று எண்ணிக் கொள்வோம்!!
———————————————————-
கோவில் திருவிழாவில்
எல்லோரும்
சாமி வருமென
காத்திருக்கிறார்கள்;
நானும் சாமியோடு
நீ வருவாயென
காத்திருக்கிறேன்!
—————————–
நீயும் நானும்
தெருவில் நடந்து செல்கிறோம்.
நீ விலகி விலகி
நெருங்கி வருகிறாய்..
நான் உனை நெருங்கி நெருங்கி
விலகிப் போகிறேன்..
எப்படியோ மாறி மாறி
நெருக்கம் கொண்டு விடும் நம்
ஸ்பரிசத்தில் –
தெருவோரப் பூக்களாய்
மலர்கிறது நம் காதலும்!
—————————————–
காலங்களை கடந்தும்
நிறைய மனசுகள்
மாறாமலிருப்பதில்லை.
மாறிப் போகும் போது
மாறட்டும் என் மனசும்.
அதுவரை உனையே
நினைத்திருக்க –
உன் பார்வையை மட்டும் எனக்கு
கடன் கொடு.
உயிர்பிரியும் விளிம்பில்
உனை மறக்கும் மனசு ஒருவேளை
கிடைக்கலாம்,
அந்த கிடைப்பில்
உன் பார்வைகளாவது
மிட்ச்சப் படட்டுமடிப் பெண்ணே!!
———————————————————–