இப்பொழுதெல்லாம்
நான் –
தனியாகத் தான் –
இருக்கிறேன்;
ஆம்! நீயில்லாத
உலகத்தோடு நான்
பேசுவதேயில்லை!!
இப்பொழுதெல்லாம்
நான் –
தனியாகத் தான் –
இருக்கிறேன்;
ஆம்! நீயில்லாத
உலகத்தோடு நான்
பேசுவதேயில்லை!!
உன் –
கால் கொலுசும்..
கை வளையல்களும்..
சொல்லிடாத –
சேதி கேட்டும்;
சொன்ன –
இரவுகளை நினைத்தும் தான்
நகர்கிறது –
வாழ்வினிந்த –
அர்த்தமற்ற நாட்கள்!
நீ வயிற்றிலிருக்கும்
ஐந்தாறு மாதத்தில்
உன்னம்மா வயிறு தொட்டு தொட்டுப்
பார்ப்பாள்,
அசையத் துவங்கிவிட்டாய்
என்பாள்,
எங்களின் அத்தனை வருடக்
காத்திருப்பும் பறக்க ரக்கையை
விரித்துக் கொண்ட கணமது,
நானும் எங்கே பார்கிறேனெனத்
தொட்டுப் பார்ப்பேன்,
உன் அசைவுகளை என் வாழ்வின்
அர்த்தமாய் அறிந்துக் கொண்ட
பொழுதுகளது.
இன்று –
இதோ எதிரே நிற்கிறாய்
கை கொட்டிச் சிரிக்கிறாய்
முத்தமிடுகிறாய்..
வாழ்க்கை அர்த்தம் பெற்றதாகவும்
ஒரு புதிய ஞானம் நீ கற்ப்பித்ததாகவும்
வாழ்வின் நெடுந்தூரத்திற்கான –
கனவுகளை உன் முகம் பார்த்து.. முகம் பார்த்து
பூரித்துக் கழிக்கிறேன்..
ஒரு கைத்தடி ஊன்றிய
கிழவர் எதிரே வருகிறார்.
நானும் இப்படித் தான் பிதற்றினேன் – இதோ
என் கதி பார்த்தாயா என்றார்.
நான் சிரித்துக் கொண்டேன்.
என் தனிமைக்கோ தோல்விக்கோ
நீ துணை நிற்க வேண்டுமெனும்
எதிர்பார்ப்பில்லா என் அன்பை
அந்த வயதான கிழவருக்கு
நான் திணிக்கவோ
புரியவைக்கவோ விரும்பவில்லை!!
இதோ.., இதை
உனக்காய் பதிகிறேன்;
உனக்கு கைகால் போல் –
உலகின் நீள அகலம் தொடும்
எண்ண சிறகு முளைத்த பின் – சற்று
வெளியே சென்று பார் –
உலகம் சுற்றிலும் பார் –
என்னை போல்
இன்னும் நிறைய அப்பாக்கள் –
ஆங்காங்கே இருக்கலாம்,
உன்னை போல் மகன் கிடைப்பானா???
————————————————————
வித்யாசாகர்
எம் வீர காவியம்
நின்னு கேளுடா
ஈழமுன்னா வெறும்
மண்ணு இல்லைடா..
புலி கொடி பறந்து
ஆண்ட தேசம்டா
உலகை;
இன்றும் தாங்கும்
ஒற்றை இனமடா!
பெண்ணைத் தாயென
பார்த்த பூமிடா
வந்தவரெல்லாம்
வாழ்ந்த மண்ணுடா;
பொண்ணும் பொருளும்
நிறைந்த சொர்க்கம்டா
போட்டதை எல்லாம்
விளைத்த வர்கம்டா..!
காலம் ஏனோ மாறி
போச்சிடா
கயவர்களாலே ஆடி
போச்சிடா;
குழந்தையும் குடும்பமும்
மாண்ட சோகம்டா
கொலைவெறி தரித்து
நடந்த துரோகம்டா!
அறுபது வருடம்
எரியும் நெருப்புடா
அநீதி அழிந்திட
பூண்ட போருடா;
இரண்டில் ஒன்றே
பார்க்கும் வீரம்டா
எதிர்க்கும் காலம்
தூரமில்லடா!
குண்டுகளெல்லாம்
உமிழும் எச்சில்டா
உயிரே கூட
துச்சமில்லடா;
ஈழம் ஒன்றே
கனவு கனவுடா..
விடுதலை ஒன்றே
எல்லை கோடுடா!
காலம் என்ன –
களையா பறிக்கு(ன்)டா????????
காலம் என்ன – எமை
களையா பறிக்கு(ன்)டா –
ஈழம் வெல்ல –
எதிர்த்தா நிற்கும்டா??
ஓரங் கட்டி
நின்ற கணக்கெலாம்
வீரம் பூட்டி
வெல்வதுறுதிடா;
யாம் சேர்ந்தால் ஞாலம்
சுருண்டு போகும்டா –
தமிழன் மூச்சின் வெப்பம்
ஈழம் வெல்லும்டா!!
யாமும் ஓர்தினம்
ஆளுவோமடா –
தமிழன் – ஆண்ட பெருமையை
பாடுவோமடா;
உரக்கக் கத்தி
கூறுவோமடா
ஈழ விடுதலை வெல்லவே
சுவாசிப்போமடா!
வெற்றி என்பது
வெறும் – பேச்சி இல்லடா
புலிக்கொடி பறக்கும்
சாட்சி நாளடா;
இதை நெஞ்சிலேற்றி
நித்தம் வாழடா
விடுதலை வெல்ல
உறுதி கொள்ளடா!! உறுதி கொள்ளடா!!!
————————————————————-
வித்யாசாகர்
நீ முதன் முதலில்
வெளிச்சத்திற்கு வந்து
சூரியனை பார்த்து
கண் கூசுகிறதென –
கண்களை மூடிக் கொண்டு
திறக்க இயலாமல் தவிப்பும் சிரிப்புமாய் நிற்க,
நானும் அம்மாவும்
உனை ‘ஹே…எனக்.. கிண்டலடிக்க,
நீ கண்களையும் திறக்க முடியாமல்
முடியவில்லையே எனும்
இயலாமையையும் மறைக்க முயன்று
சிரித்து மழுப்பிய அழகை
எந்த புகைப்படத்தில் பதிந்து வைப்பேன்????
பதிய இயலாமையில் –
கவிதையாவது செய்தேன்!!