ஞானமடா நீயெனக்கு – 38

சிலநேரம் அம்மா அம்மா
என்றழுவாய்..

அம்மாவிடம் தந்தாலும்
அப்பா அப்பா
என்றழுவாய்.,

நானும் எனக்காக
அழுகிறாயோ என்றெண்ணி
தூக்கி மார்மேல் போட்டு
தட்டுவேன்

நீ இன்னும் கதறி
அழுவாய்..,

ஒன்றும் புரியாமல்
மீண்டும் –
அம்மாவிடமே தருவேன்..

என்ன செய்வதென்று புரியாமல்
எப்படியாவது உன் அழையை
நிறுத்தும் எண்ணத்தில் –
அவள் உருக உனை அனைத்துக் கொள்வாள்

நீ மெல்ல அழுவதை நிறுத்திக்
கொள்வாய் –

உன் தேவை அப்பா அல்லது
அம்மா எனும் வார்த்தையோ
கூப்பாடோ அல்ல,
தாய்மை’ என்று –
பின் புரிந்ததெனக்கு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 37

டு இரவில்
எழுந்து அழுவாய்; கதறுவாய்;

கனவு கண்டிருப்பாயோ
என்றெண்ணி சாமியறை சென்று
திருநீரெடுத்து – எதையோ எண்ணி
உன் நெற்றியில் வைப்பேன்,

உனக்கு அழை நின்றதோ
இல்லையோ –
எனக்கு என்னம்மா அப்பா இட்டதெல்லாம்
நினைவுக்கு வரும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 36

நான் யாரை பார்த்தாலும்
என் பிள்ளை இப்படி
என் பிள்ளை அப்படி என்று
என்னென்னவோ சொல்கிறேன்;

நீ நாளை வளர்ந்த பிறகு
உன்னப்பா –
இப்படி இப்படி என்றெல்லாம்
உனக்கு நினைவிலிருக்குமா!!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 35

உனை –
சற்று வளர்ந்ததும்
கடைக்கு அழைத்துச் சென்றேன்,

நீ குழந்தை பொம்மை
எடுத்தாய்
வீடெடுத்தாய்
வண்டிகள் எடுத்தாய்
நாய் கரடி பொம்மைகள் எடுத்தாய்,
மிதிவண்டி சொப்புகளென – என்னென்னவோ
எடுத்தாய்,

எல்லாவற்றையும் பார்த்து
துள்ளி குதித்தாய் –
சரி வைத்துவிட்டு வா போகலாமென்றால்
முடியாதென்று
அழுதாய் –

அவைகளை எல்லாம் பிடுங்கி
கடையிலேயே வைத்துவிட்ட
என் ஏழ்மை –
உனக்கு அவைகளை எல்லாம்
காட்டிவிட்டு மட்டும் வந்து
வீட்டில் அமர்ந்து அழுதது!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 34

ப்படியோ –
வேண்டாமென்று நினைத்து நினைத்தே
எதையேனும் உனக்கு
வாங்கி வரும் பழக்கத்தை
உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன்.

வேறென்ன செய்ய –
அப்பா என்று நீ ஓடிவந்து
என் கையை விரித்துப் பார்க்கையில்
ஒன்றுமில்லாது – ஏமாந்து போவாயோ
என மனசு உடையும் வலி –
வாங்கி அரும் அப்பாக்களுக்கே
புரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக