149 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

கொள்ளு தாத்தா – பாட்டிக்கு,
பாட்டி – அம்மாவுக்கு,
அம்மா – எனக்கு,
நான் – என் பிள்ளைக்குன்னு
விக்கல் வரும்போதெல்லாம்
தலையில பூ சுத்திவைப்பதை விட
ஏன் எனக் கேட்டிருந்தால் –
என்னைக்கோ விக்கல் ஒரு தேக்கரண்டி
தண்ணியில நின்னு போயிருக்கும்;

நாம ஏன்னும் கேட்கல
ஒரு தேக்கரண்டி தண்ணியும்
கொடுக்கல –
நாளைய தலைமுறை வரை
தலையில் பூவைக்க சொல்லிகொடுத்து
காதுல பூ மாட்டி அலைகிறோம்!!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

148 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

ன்னை பார்த்தால் யோகம்
வரும்னு சொன்னவன் கூட
செத்துப் போயிருப்பான்;

அதெப்படின்னு
சிந்திக்காம வாங்கினவன்
வீட்ல கழுதை படமும்
நெற்றியில் முட்டாள் பட்டமும்
தொங்குறதை –
கழுதை கூட பார்த்து
சிரித்ததோ என்னவோ;

கழுதைங்களுக்குத் தான்
தெரியும்!!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

147 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

ம்பிக்கைல கொஞ்சம்
உழைப்புல கொஞ்சம்
உண்மைல கொஞ்சம்
அன்புல கொஞ்சம்
நேர்மையில் கொஞ்சம்னு
எல்லாத்தையும் கூட்டினா கடவுள்னு
நம்புறமோ இல்லையோ;
எல்லாத்த்தையும் ஒதுக்கியதால்
மிஞ்சிய கோர முகம் தான்
பேய் யென்று –
வேண்டுமெனில் கொள்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

146 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

தெரு மூலையில
உடைத்த பூசணிக்கா,
உண்டியல்ல போட்ட காசு,
கோவில்ல நேந்து விட்ட கோழி,
ஆடு வெட்டி போட்ட படையல்,
வருசாவருசம் மிதிக்கும் நெருப்பு,
நாக்குலையும் மூக்குலையும் குத்தும் வேல்,
நாப்பதம்பது நாள் விரதம்……….
இன்னும் இன்னும் இன்னும் என்னென்னவோ;

இதலாம் வேண்டாம்னு –
சாமியே வந்து சொன்னா கூட
சாமியையே முட்டாளென்று சொல்லும்
புத்திசாலிகள் நாம்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

31 மனைவிக்கு தெரியாமல் எழுதிய கடிதம்! (பெண்ணியம்)

ப்படி நிகழ்ந்ததோ அது
ஆணுக்கு பெண் –
அடக்கம் என்னும் சமாச்சாரம்,

சமபங்கு கொடுப்பதாய்
உன்னையும் வேலைக்கனுப்பி
உன் திறமைகளை வெளிப்படுத்த எண்ணி
பாவம்; அவளும் கஷ்டப் படுவானேன்
நிம்மதியாய் வீட்டில் இருக்கட்டுமே என
நினைத்த இடத்தில் தான்
துரோகம் இழைக்கப் பட்டுவிட்டது போல்;

உடல் கூசப் பார்க்கும்
கயவர்களுக்கு மத்தியில்
மனம் கூசி போவாயோ
வீட்டில் தான் இருந்து விடேன்
உனக்காக உழைக்கத் தான் –
நானிருக்கேனே என்று எண்ணியதில் தான்
துரோகம் இழைக்கப் பட்டுவிட்டது போல்;

அக்கம் பக்கம் கடைக்கு செல்கையில்
சோர்ந்து போகும் நீ –
பேருந்தில் எறி,
நான்கு தெரு நடந்து,
எல்லோருக்கும் பதில் சொல்லி,
எத்தனையோ எரிச்சல்களுக்கு மத்தியில் சிரித்து
நான் படும் இன்ன பிற அவஸ்தைகளை
சரிபங்காய் நீயும் படுவானேன் என
தவறாய் யோசித்த இடத்திலிருந்து –
துரோகம் இழைக்கப் பட்டுவிட்டது போல்;

நானும் போயி –
நீயும் போயி –
இருவருக்கு மத்தியிலும் வாழும் பிள்ளைகள்
பாசமற்று ஏங்கிப் போகுமோ
என்று நினைத்த சுயநலத்தில் தான்
உனக்கான துரோகம் –
இழைக்கப் பட்டுவிட்டது போல்;

ஆணுக்கும் பெண்
சமமாக வேண்டும்
எவருக்கு எவரும் தாழ்வாக வேண்டாம்
என்றெல்லாம் எண்ணினாலும் –
எங்கோ இழைக்கப் பட்ட துரோகம்
எதற்கோ எனக்கு நீ பயந்து
நடுங்குகையில் –
உள்ளே உரைக்காமலில்லை; வலிக்காமலில்லை.

என்னால் உன்னை
‘டி’என அழைக்க சம்மதித்த நீ,
என்னை ‘வா’ போவென்றும்
சொல்ல அனுமதித்திடாத என் நடத்தை
ஒரு பக்கம் தாழ்ந்த தராசில் தானே
நிற்கிறது??? என –
எல்லோரும் யோசிக்கும் நாள்
வெகு தேவையாகிப் போனது – இக்காலத்தில்.

உலகம் முழுக்க
பெண்ணியம் பேசுகிறார்கள்
நானும் ஆமென்று தலை அசைக்கிறேன்,
வீட்டில் –
உனக்கந்த சுதந்திரம் தரப்பட்டதா எனில்
இல்லை என தலைகுனியும் அசிங்கம்
யாரால் –
காலவேகத்தினுள் புகுத்தப் பட்டதோ?? என
கூட்டம் போட்டெல்லாம் வேண்டாம்
அவரவர் மனதிலாவது யோசிக்க வேண்டிய
தருணத்தில் தான் நிறைய பேர்
நிலை கொண்டுள்ளோமோ???!!

‘உலகம் சென்று உபதேசம்
செய்வதற்கு முன் –
வீட்டை சுற்றி பார்’ என எழுதியதால்
நானும் அவ்வப்பொழுது பார்க்கிறேன்
என் வீட்டை –
ஆங்காங்கே காரி உமிழ்கிறது என்
மனசாட்சி, என்னையும் இன்னும்
நிறைய போரையும்.

இதலாம் தாண்டி –
வேறென்ன தான் உனக்கு செய்வதென்று
யோசிக்கையில் –
வீடு நிறைந்த மங்கலமாய் வாழும்
மொத்த பெண்ணினத்தின் குரல்களும்
காதில் இப்படித் தான் கேட்கிறது –
‘மொத்த ஆண்களும் சேர்ந்து
இப்படி யோசிக்கவாவது செய்யுங்க –
‘வீட்டில் மிக வீரமாக எழும் கூச்சலின் வேகம்’
சற்று குறையவாவது செய்யட்டும்!
———————————————————————–
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்