மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (42)

ரு லட்சமாம்
இரண்டு லட்சமாம்
கணக்கு சொல்கிறது செய்தி
முல்லைவாய்க்காலில் இறந்தவர் பற்றி;

கணக்கில் வராது இறந்து போன
எத்தனயோ உயிர்களுக்கென்ன
இன்னொரு பிறப்பையா
திருப்பித் தந்துவிடுமிந்த தேசங்கள்????

ஓஹோ; தமிழரை
உயிர்கணக்கிலிருந்து
தள்ளிவைத்துவிட்டார்கள் போல்
சிங்களன் வெல்லும் வரை; பாவிகள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (41)

முட்கள் உடைந்து போன
மீனுக்கு வருந்தும் இனம்..
என் –
வீர சமருக்கு துணை நிற்காது
வருந்தியென்ன பயனென்று
சபிக்குமோ நமை –
விளக்கேற்றுகையில் –
நம் மாவீரர்களின் ஆத்மாக்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (40)

வ்வொரு
உறக்கத்தின் போதும்
இமை விட்டு நீங்காத –
பிணக்குவியல்களாய்
முள்ளிவைக்காலில் முடைந்துப் போன
எம் உறவுகளின் அந்த பிரிவு –
அந்த நாள் –
அந்த கதறல்கள் –
அந்த பொழுது –
எனக்கு கடைசி நினைவாக
இருந்துவிட்டாலென்ன!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (39)

றந்த என்
வீரர்களுக்கும்
உறவுகளுக்கும்
விளக்கேற்றி விளக்கேற்றி
வைக்கிறேன்;
கண்ணீர் அனைத்து அனைத்து
விடுகிறது.
உலகிற்கு எங்களின்
இருட்டு மறைக்கப் பட்டு
வெளிச்சம் மட்டுமே தெரிகிறது போல்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (38)

ன்று இரண்டு
மூன்றேன்று சுட்டிருப்பானோ
சிங்களவன்?!!
சுடும்போது
ஏதேனும் ஒரு குரல்கூடவா
அவன் உறவை அவனுக்கு
நினைவுருத்தவில்லை;
போகட்டும்,
நம் சமர் –
எவனை கொல்வதுமல்ல
ஈழம் – வெல்வது மட்டுமெனக் கொள்வோம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக