Tag Archives: விடுதலைக் கவிதைகள்

வித்யாசாகரின் புதிய பாடல்..

உறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு!!

எங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“கனவுத் தொட்டில்” நாவலின் ஆய்விற்கென நம்மிடம் கண்ட நேர்காணல்..

இணைப்புக்களை வாசிக்க கீழே சொடுக்கவும் இணைப்பு 1 : ஆய்வு ஏற்கப்பட்டதன் கையொப்பச் சான்றிதழ் இணைப்பு 2 : ஆய்வின் முடிவுரை நேர்காணல் கீழுள்ளவாறு.. 1) குடும்பச் சிக்கலை கனவுத் தொட்டிலின் கதைக் கருவாக எடுத்துக்கொள்ளக் காரணம் என்ன? இச்சமுகத்தால் சுடப்பட்ட ரணத்தின் வலியில் பிறந்த சாதனையாளர்கள் எண்ணற்றோருள்ளனர். ஏழை பணக்காரர் எனும் ஏற்றத் தாழ்விற்கு … Continue reading

Posted in ஆய்வுகள், நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)

கொலம்போ விமான நிலையைம். தலையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி ஒரு காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

2, அறுந்த மஞ்ச கயிறு.. (சிறுகதை)

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்; அன்பிருந்தால் அருகே வரும் எமனைக்கூட எட்டி காலால் உதைத்துவிடலாம் என்பதன் அர்த்தம்நோக்கி பிறக்கிறது இச் சிறுகதை.. அது ஒரு வெள்ளிக்கிழமை, விமல் ஓடிவந்து எகுறி கட்டிலில் மல்லாந்துப் படுத்துக்கொண்டிருக்கும் கலையின் மேல் குதிக்கப்போக அவள் அவனை கைதூக்கி தடுத்து தட்டிவிட்டு வெடுக்கென ஓரமாக ஒதுங்கிக்கொள்ள கீழே விழயிருந்த விமல் எதையேனும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்