Tag Archives: அம்மா

ஞானமடா நீயெனக்கு – 62

உன் நெடுந்தூர பயணத்தில் உனை போல் ஒரு பூ – உன் வீட்டிலும் பூக்கும்; அன்று – அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில் ஒன்றிலாவது நிறைந்திருக்கும் – நானுனக்கு கொடுக்கும் நிறைய முத்தங்களின் அன்பு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

61 குழந்தைகள் காணும் உலகம் புதிது; கவனம் கொள்க!!

அடுப்பு எரிகிறது.. நான் வெளியே கூவிச் சென்ற கீரைகாரரிடம் கீரை வாங்க வாசல் நோக்கி போகிறேன் நீ அடுப்பினை பார்க்கிறாய்.. அடுப்பில் நெருப்பு சிவப்பாக கனன்று எரிகிறது உனக்கு நெருப்பு அதிபுதிது முதன் முதலாக இன்றுதான் அடுப்பின் சிவந்த – நெருப்புத் துண்டுகளை பார்க்கிறாய், நெருப்பு சிவக்க சிவக்க – நெருப்பின் மேல் உனக்கு ஆசை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “அம்மா…”

சோரூட்டியது போகட்டும்; உனை கொஞ்சி தலைகோதி விளையாட அழகு பார்த்தது போகட்டும்; ஊரெல்லாம் உன் வெற்றியை சொல்லி கொண்டாடி வாசலெல்லாம் நீ வருவாயா என காத்திருந்தே வயதை யொழித்த தாயன்பு போகட்டும் – வேறென்ன தான் வேண்டும் ஒரு தாய் பற்றி சொல்லவெனில் நம் செல்ல சகோதரி, வார்த்தையின் வீரியக் காரி கவிதை உச்சரிப்பின் சொல்லழகி … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 60

உனக்கு விரல் வத்தல் பிடிக்குமென்று நிறைய வாங்கிவந்தேன் போதுமானதை தின்று விட்டு மீதியை வீடெல்லாம் கொட்டி இரைத்தாய் அளவுக்கு அதிகமானால் எல்லாமே இப்படித் தான் என்றதில்; எனக்கும் நீ ஞானமானாய்!! ———————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 59

உனக்கு முகம் கழுவி வாசனை மாவு பூசி சாமி கும்பிட்டு திருநீரிட்டு நிலை கண்ணாடியில் தூக்கியுனை காட்டுகிறேன் என் அம்மா உன் பாட்டி எனை ‘அறிவில்லாதவன் குழந்தையை கண்ணாடியில் காட்டுகிறான் பாரென்று’ திட்டுகிறாள் நீ கண்ணாடியில் உனை பார்த்து உன் நேர்வகிடு முடியழகு பார்த்து என்னையும் பார்த்து இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதாய் நினைத்தாயோ … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக