Tag Archives: உறவு

“கனவுத் தொட்டில்” நாவலின் ஆய்விற்கென நம்மிடம் கண்ட நேர்காணல்..

இணைப்புக்களை வாசிக்க கீழே சொடுக்கவும் இணைப்பு 1 : ஆய்வு ஏற்கப்பட்டதன் கையொப்பச் சான்றிதழ் இணைப்பு 2 : ஆய்வின் முடிவுரை நேர்காணல் கீழுள்ளவாறு.. 1) குடும்பச் சிக்கலை கனவுத் தொட்டிலின் கதைக் கருவாக எடுத்துக்கொள்ளக் காரணம் என்ன? இச்சமுகத்தால் சுடப்பட்ட ரணத்தின் வலியில் பிறந்த சாதனையாளர்கள் எண்ணற்றோருள்ளனர். ஏழை பணக்காரர் எனும் ஏற்றத் தாழ்விற்கு … Continue reading

Posted in ஆய்வுகள், நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 60

உனக்கு விரல் வத்தல் பிடிக்குமென்று நிறைய வாங்கிவந்தேன் போதுமானதை தின்று விட்டு மீதியை வீடெல்லாம் கொட்டி இரைத்தாய் அளவுக்கு அதிகமானால் எல்லாமே இப்படித் தான் என்றதில்; எனக்கும் நீ ஞானமானாய்!! ———————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 59

உனக்கு முகம் கழுவி வாசனை மாவு பூசி சாமி கும்பிட்டு திருநீரிட்டு நிலை கண்ணாடியில் தூக்கியுனை காட்டுகிறேன் என் அம்மா உன் பாட்டி எனை ‘அறிவில்லாதவன் குழந்தையை கண்ணாடியில் காட்டுகிறான் பாரென்று’ திட்டுகிறாள் நீ கண்ணாடியில் உனை பார்த்து உன் நேர்வகிடு முடியழகு பார்த்து என்னையும் பார்த்து இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதாய் நினைத்தாயோ … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 58

உன் கால்சட்டை ஈரமானதில் மண் பூசி வந்து நின்றாய். ஐயோயெனப் பதறி மேல்சட்டையும் மாற்றிவிட்டேன்; மீண்டும் நீ சென்று நீரில் மூழ்கி ஈரமாக வந்து நின்றாய். ஈரமாயிற்றே குளிருமோ என்று அதையும் மாற்றி விட்டேன் சோறெடுத்து சட்டையிலெல்லாம் பூசிக் கொண்டாய் – அதையும் மாற்றி விட்டேன் அடுத்து மீண்டும் கால் சட்டை ஈரமானது அதையும் மாற்றி … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 57

எனக்காக நீ காத்திருப்பாயோ இல்லையோ தெரியவில்லை உனக்காக நான் நிறைய காத்திருக்கிறேன் உன்னோடு மட்டுமே இருக்கிறேன் அதை உன்னைவிட்டு விலகி நின்றெழுதிய இக்கவிதை சொல்லும்! ————————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக