Tag Archives: உறவு

ஞானமடா நீயெனக்கு (52)

உனக்கு பிடித்ததை மட்டுமே நான் வாங்க முயல்வேன்; உனக்குப் பிடிக்காதது என்று ஒதுக்கிய சிலதில் என் பெயரும் ஏனோ முன்னுக்கு வருகிறது, ஆம்; நிறைய வீடுகளில் நிறைய அப்பாக்களை நிறைய பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை போல்; அடிக்காத அப்பாக்களை தவிர! —————————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (50)

என்னவோ வளர்கிறாயடா நீ ஏன் நான் கண்டிக்கிறேன் என்று கூட புரிய மறுக்கிறாய்; உன் நிராகரிப்பில் நான் எத்தனை உடைகிறேன் என்பதை நீ புரிந்துகொள்ளும் காலம் வரை காத்திருப்பது – ஏதோ என் தவறிற்கான இறைவனின் தண்டனை என்று நினைத்துக் கொள்கிறேன்!! ——————————

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (49)

குழந்தைகளில் மிக சிறந்தவன் நீ என்று நினைப்பேன்; உண்மை தான் மிகச் சிறந்தவன் நீ, அதனால் தான் என்னை உனக்கு பிடிப்பதில்லை போல்! ———————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (48)

உனக்கு காய்ச்சலென்று முடியாமல் மடி மீது படுத்திருக்கிறாய், உன் வலி தாளாத முகம் பார்க்க பார்க்க என் ஏழேழு பிறப்பினையும் சபிக்கிறது மனசு! —————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (47)

நீ முடியாமல் ம்.. ம்.. என்று உம் கொட்டி படுத்திருக்கிறாய் உன் – ஒவ்வொரு ம்.. சப்தமும் எனை கொண்று கொன்றே பிறப்பிக்கிறதென – உன் காய்ச்சலுக்குத் தெரிவதேயில்லை! ——————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக