Tag Archives: உலகம்

32 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

இறந்தும் வாழ்வதாய் நம்மோடு இருப்பதாய் அவர் புகழ் நிலைப்பதாய் ஆயிரம் சொல்லிக் கொள்ளளாம், மீண்டும் – பார்க்க தொட பேச அருகாமை கொள்ள; ஏன், தூரத்தில் கூட ‘இல்லையே’ என்ற உண்மையை யாரால் மாற்றிட இயலும்? எப்படியோ இறந்தவர் உயிரோடில்லை என்ற ஒற்றை சொல்லிலிருந்து வலுக் கொள்ளும்; மரணத்தின் கொடுமையை அழுகையை; யாராலும் அகற்ற முடிவதில்லை!! … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

31 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

கவிதை கண்ணீர் உறவுகளின் ஆறுதல் எல்லாம் தோற்கிறது மரணத்திடம், இறப்பதை விட இறந்தவரோடு இருப்பது வெகு கடினம்! ————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

நம்பவே முடியவில்லை சிலரின் மரணத்தை, யார் யார்..? என்று..? எங்கெங்கோ…………?!!!!!!!! ஒன்றுமே உறுதியில்லை, என்பதும் நினைவில் இருந்தே தொலைவதில்லை, மரணம் மட்டும் தவறாமல் நிகழ்ந்து விடுகிறது – அது நினைக்கும் நாளில்!! ———————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

29 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

விழுந்து விழுந்து அழுகிறேன் இதற்கு முன் இறந்தவர்கள் கூட கண்ணீரில் சொட்டுகிறார்கள், பார்ப்பவர்களுக்கு – ‘நம் அழுகையின் சப்தம் மட்டும் – இறந்தவருக்காக அழுவதாக காட்டிக் கொண்டாலும் உள்ளே’ – இறந்த எல்லோரையுமே நினைத்தும் தான் அழுகிறது மனசு! ————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

28 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

விழுந்து விழுந்து கத்தியழு மறக்கிறதா பார் மரணம்; மறக்காது, நிற்கிறதா பார் அழுகை நிற்காது, புரிகிறதா பிறப்பு இறப்பும் புரியாது, அதனாலென்ன வாழ்ந்ததாய் சொல்லிக் கொள்; மரணம் நீ இறந்ததாய் குறித்துக் கொள்ளும்! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக