Tag Archives: உலகம்

27 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

மரணமென்ன அப்பேர்பட்டதா என்று தான் எண்ணம்; ஆனாலும் தடுக்க முடியவில்லை மரணத்தை, படக்கென பிடுங்கிக் கொண்டதில் மாலைகளாகக் குவிந்து கண்ணீராக நனைந்ததில் – மரணம் என்னை நீ – நாளைக்கென்று குறித்துக் கொண்டிருக்கலாம், யார் கண்டது; இன்றைக்கே கூட…இருக்கலாம்!! ———————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆக, அவனோட மரணம்; அவனாலேயே அவனுக்கு நிகழ்கிறது!!

ஆற்றுமணல் வீடு கட்ட மட்டுமாச்சி, ஆறு ஏரி குளமெல்லாம் பாடத்தில் படிக்க மட்டுமாகுது, சோறு குழம்பு பதார்த்தம் கூட பேசனாயி போச்சி, பேசினாலும் நடந்தாலும் ஸ்டெயிலென்கிறான் மனிதன், செத்தாலும் மாலை போட்டு வீடு கட்டி அழுவுறான்; குடிச்சிப்புட்டு ஆடுறான்; சோறு கொஞ்சம் குறைந்தாலும் பொண்டாட்டிய அடிக்கிறான் போதை தெளிந்து விடியும் போது பேன்ட் சட்டையில் திரியுறான் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 25

ஒரு மனிதன் பிறக்கையில் பிறக்கிறது மரணமும் மனிதனோடு வளர்கிறது மரணமும் மரணத்தை கொன்று கொன்று வென்று விட்டதாய் எண்ணும் நாளில் மரணம் மனிதனை நெருங்குவதை மனிதன் அறிவதுமில்லை, மனிதன் அடங்குவதுமில்லை! ————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 24

மனிதம் வளர்கத் தானே கடவுள் கல்லாகவோ அல்லது கல்லில் கடவுளோ அல்லது கல்லின்றியோ கூட கடவுள் கற்பிக்கப் பட்டது? மனிதன் தான் பாவம் மனிதனை கொன்றாவது கடவுளை காப்பதாக எண்ணி கொவில்களைமட்டுமே காக்கிறான், அவனின் காப்பகத்தில் சேமிக்கப் படுகின்றன கொவிலால் கொள்ளப் பட்ட உயிர்கள். கடவுள், உடைந்த கோவிலின் வெளியே நின்று மனிதனை தேடி அலைவார் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 23

ஒரு உயிரொழுக பூக்கிறது அன்பு; இல்லாத மனசிலிருந்து. மனசெனில்’ அறிவு தாண்டி ஆத்மா நிறையுமிடமோ தெரியவில்லை. நான் கேட்டது கிடைத்த சிரிப்பைவிட வேண்டியதை இழந்த துக்கத்தில் – மனசை அடையாளாம் காணாமல், உடம்பெல்லாம் எரியும் வேதனை தீயில் மனசெங்கோ அன்பின் குவியலாக இருப்பதாகத் தான் தெரிகிறது; எனக்குள்ளும்! ஒரு பார்வையில் பரிதவித்து முத்தத்தில் நிறைந்து பிரிவில் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக