Tag Archives: உலகம்

அரைகுடத்தின் நீரலைகள் – 7

வாழ்க்கையை உலகை வெற்றிகளை யெல்லாம் சுண்டி ஒரு விரல் நுனியில் வைக்க மனசு போதும் என்று தெரிந்தோ தெரியாமலோ உணர்ந்தவர் தான் முன்னே நிற்கிறார்; புரியாதவர்கள் வாயை மூடிக் கொண்டு மனதை திறப்போம்; நாளையாவது – பின்னிருந்து முன் செல்லலாம்! ——————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 6

எத்தனை சாமி வந்தும் தன்னை நான் தான் சாமி என்று அடையாளப் படுத்திக் கொள்ள இயலாமையிலும் எப்படியோ நம்புகிறது மனசு சாமியை! —————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 5

ஞானம் என்பது அறிவென்று பொருள் கொள்; அறிவு சிந்தித்தலில் மட்டுமல்ல செயலோடு சிந்தித்தலில் சிந்தித்து செயல் படுவதில் செயலுக்கும் அனுபவத்திற்கும் சிந்தனைக்கும் இடையே முடிவுறாத ஒன்றாய் மீண்டும் முளைக்கிறது. முடிவுற்ற அறிவு அதாவது முடிவுற்ற ஞானம் பேசுவதில்லை, பேசக் கிடைப்பதில்லை செயல்களாய் செயல்களில் கலந்துகொள்கிறது! கலக்காதவரை சப்தமிடுகின்றன அரைகுடத்தின் நீரலைகள்! ———————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 4

உனக்கும் எனக்குமிடையே ஆயிரம் மைல்கள் தூரமிருக்கட்டும் நினைத்த உடன் நினைக்கும் நீ ஆயிரம் மைல்களை கொன்றாய் என்று தானே அர்த்தம்! ——————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 3

மனிதர்களின் மனசாக என்றோ எங்கோ பிரிந்து போன உறவின் மறுதோன்றலாகவே நீயும் நானும் இருக்கிறோமென்பது தெரியாதவரை – இதையத்தை கொடுப்பதாகயெல்லாம் பிதற்றுகிறது தான் மனசு! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக