Tag Archives: ஏழ்மை

காதல் தேரினில் அந்தக் காரிகை போகிறாள்..

1 அந்த தெருமுனை திரும்பும் போதெல்லாம் உன் நினைவு வரும்; நீயுமங்கே நின்றிருப்பாய் நானுனை திரும்பிக்கூட பார்க்காமல் போவேன், நீயும் பார்க்கமாட்டாய்; நாம் பார்க்காவிட்டலென்ன காதல் நம் தெருவெல்லாம் பூத்திருக்கும்.. ————————————————————– 2 காற்றடிக்கும் கண்களை நீ சிமிட்டும் நினைவு வரும்.. நிலா காயும் நீ தெருவில் வந்துநிற்க பூக்கள் சிரிக்கும்.. மேகம் நகரும்.. உன் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35, இலைகள் அசையா மரம் பற்றியும் மனிதன் பற்றியுமான கவலை..

1 மரம் விரிச்சோடிக் கிடந்தது காற்றேயில்லை கயிறு கட்டிலை நம் தாத்தாவோடு நாம் எரித்திருத்தோம்! —————————————————————————– 2 மரம் வெட்டி மரம் வெட்டி மரவெட்டியானான் மனிதன்; மனிதத்தையும் மரத்தோடு வெட்டியிருந்தான்!! —————————————————————————– 3 மின்னல் விழுந்து பனைமரம் எரிந்துபோன கதையெல்லாம் இப்போது நடப்பதில்லை; பனைமரம் வெட்டப்பட்டபோதே மின்னலையும் நிறைய வெட்டிவிட்டோம் நாம்! —————————————————————————– 4 ஒரு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்)

மூப்பில்லா தமிழுக்கும் முடிவில்லா தமிழோசைக்கூட்டத்தின் தலைமைக்கும் கவிவீச்சுள்ள தோழமை உறவுக்கும் எம் பேச்சிற்கு செவிசாய்க்கும் அவைப் பொறுமைக்கும் என் மதிப்பு கூடும் முதல்வணக்கம்.. கை தட்டப் பறக்கும் உள்ளங்கை தூசாக கவலைகள் பரந்து மனசு தமிழால் லேசாகும் நட்பால் நெருங்கநெருங்க அகவேற்றுமை யதுஇல்லாக் காசாகும் சொக்குப்பொடிபோட்டு மயக்கும்தமிழுக்கு ஒற்றுமைஒன்றே மூச்சாகும் – இம் முதல்வெள்ளியின் தருணம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..

அது ஒரு கண்ணாடி உடையும்போன்ற மனசு; எப்படியோ ஆண் பெண் அவள் அவன் அது இதுவென்றுச் சொல்லி உடைத்துவிடுவதில் என்னதானிருக்கோ (?) ஆனால் – உடையாமல் பார்த்துக் கொள்ளும் அன்பில் தான் அவளும் நானுமிருந்தோம்; தேனீர் தருவாள் இனிப்பது அவளாகவே இருப்பாள், சோறு போடுவாள் உண்டது தனிச் சுகமாகயிருக்கும், தோள் மீது சாய்ந்துகொள்வாள் சாய்ந்துக் கிடப்பதை … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முற்றுப்புள்ளி!!

வாழ்க்கை தீரா வெள்ளைப் புடவைக்கு நெற்றியில் ஒரு புள்ளி வேண்டும், குற்றம் இதென்று உணராது நீளும் காதல்கொலைக்கு நிச்சயம் மறுபுள்ளி வேண்டும், வட்டிக் கடனோடு ஓயாத துயருக்கு வரும்புள்ளி மரணமென்றாலும் வேண்டும், குட்டிச்சுவர் மீது உடைகின்ற புட்டிகளில் தேசம் தொலையாத புள்ளியது வேண்டும், வாழ்க்கை வரமாக அமைகின்ற பாடத்தின் அறிவை விற்காத சமப் புள்ளி வேண்டும், … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்