Tag Archives: ஐக்கூக்கள்

ஞானமடா நீயெனக்கு – 59

உனக்கு முகம் கழுவி வாசனை மாவு பூசி சாமி கும்பிட்டு திருநீரிட்டு நிலை கண்ணாடியில் தூக்கியுனை காட்டுகிறேன் என் அம்மா உன் பாட்டி எனை ‘அறிவில்லாதவன் குழந்தையை கண்ணாடியில் காட்டுகிறான் பாரென்று’ திட்டுகிறாள் நீ கண்ணாடியில் உனை பார்த்து உன் நேர்வகிடு முடியழகு பார்த்து என்னையும் பார்த்து இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதாய் நினைத்தாயோ … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 58

உன் கால்சட்டை ஈரமானதில் மண் பூசி வந்து நின்றாய். ஐயோயெனப் பதறி மேல்சட்டையும் மாற்றிவிட்டேன்; மீண்டும் நீ சென்று நீரில் மூழ்கி ஈரமாக வந்து நின்றாய். ஈரமாயிற்றே குளிருமோ என்று அதையும் மாற்றி விட்டேன் சோறெடுத்து சட்டையிலெல்லாம் பூசிக் கொண்டாய் – அதையும் மாற்றி விட்டேன் அடுத்து மீண்டும் கால் சட்டை ஈரமானது அதையும் மாற்றி … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 57

எனக்காக நீ காத்திருப்பாயோ இல்லையோ தெரியவில்லை உனக்காக நான் நிறைய காத்திருக்கிறேன் உன்னோடு மட்டுமே இருக்கிறேன் அதை உன்னைவிட்டு விலகி நின்றெழுதிய இக்கவிதை சொல்லும்! ————————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 56

எப்படியோ.. போகும்போது ஓடிவந்து டாட்டா காட்டவும்; வந்தவுடன் ஓடிவந்து ‘அப்பா’ என்றழைப்பதிலும் என் உயிரை எனக்கே மீட்டுத் தருகிறாயென என்றேனும் நீ வளர்ந்து இக்கவிதையை படிக்கும் தருவாயில் ஒருவேளை புரியலாம்!! ————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (51)

வளர்ந்து நீ பெரியவனாகி என்னென்னவோ செய்ய வேண்டுமென்றெல்லாம் எனக்கு கனவுகளில்லை, நீ நன்றாக வளர்வாய் உனக்கு நான் பலமாக மட்டுமே இருப்பேன், கடைசி வரை நீயெனக்கு; இல்லையில்லை – நான் உனக்கு அப்பாவாக இருப்பதொன்றே போதும்! —————————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்