Tag Archives: ஐக்கூக்கள்

100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..

1 சமையலறைக் குழாயில் குடிக்க தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; பாதி நிறைவதற்குள் நீ என்னருகே வந்து அப்பா எனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்கிறாய்; நான் தண்ணீர் நிரம்பிடாத பாதி சொம்போடு நீ கேட்டதும் வெடுக்கெனத் திரும்பி உனக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்; நிருத்திவிடாதக் குழாயிலிருந்து தண்ணீர் போய்க் கொண்டேயிருக்கிறது நீயும் குடித்துக் கொண்டேயிருக்கிறாய், இரண்டையுமே என்னால் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

15) அ.. ஆ.. சொல்லுமழகில் உயிரெல்லாம் அன்பு நிறையும்!!

மரமெல்லாம் பூப்பூக்கும் பூவோடு இலைக் கணியாகும் கணியோடு’ தின்று நிற்க நிழலாகும் நிழலுக்குப் பின் விறகாகும்; விறகெல்லாம் நெருப்பாகும் நெருப்பெல்லாம் எரிந்து விளக்காகும் விளக்கில் வெளிச்சம் பூக்கும் வெளிச்சத்தில் வாழ்க்கை நமக்கே வசமாகும்; மனசெல்லாம் ஆசை நிறையும் ஆசையில் அன்பு மலரும் அன்பில் நெருக்கம் தீயாகும் – உடல்தீயின் தகிப்பில் வீடெல்லாம் மழலைச் சிரிக்கும்; செடியாகி … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

13 என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்….

வாழ்வின் பாடங்களில் கிழிந்த பக்கங்களின் ஒவ்வொன்றையும் எடுத்து தன் சிரிப்பில் ஒழுகும் எச்சிலால் ஒட்டிவிடுகிறாய்; இதயம் தைக்கும் ஊசியென என் அறுந்த மனதின் கிழிசல்களில் உன் நிறைவுறாத வார்த்தைகளைப் போட்டு பிறந்த பயனை நிரப்புகிறாய்; தத்தி தத்தி நடந்துவந்து எனை எட்டியுதைக்கும் ஒற்றை உதையில் என் மெத்த கர்வத்தையும் இலகுவாக உடைத்து உடைத்து வீசுகிறாய்; நீ … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு…..

1 ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை அறியாமலே குப்பையில் கொட்டப் படுகிறது தினமும் பழைய சாதம்!! ——————————————————————– 2 மணக்க மணக்க உண்டுமுடிக்கும் முன் ஒரு கை சோறு ஒதுக்கி பிறருக்கும் தர இயலுமெனில் ஒரு உயிரேனும் உயிர்  பிழைக்கும்!! ——————————————————————– 3 டீ  குடித்து பண் தின்று வாழ்பவர்களுக்கு சாபம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

2 அறிவு தரும் ஆனந்தம்..

உலகே உலகே காது கொடு ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு மனமே மனமே பாடுபடு – படிப்பால் வாழ்வை வென்று எடு; படிக்கப் படிக்க வளர்ந்துவிடு எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக் கண்ணைத் திறந்தே யொழித்துவிடு; படிப்பு கொடுக்கும் தைரியத்தில் பட்டம் சுமந்துக் காட்டிவிடு படிப்பால் நாளை உலகத்தின் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்