Tag Archives: ஐக்கூ

36 சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை!

ஆதிக்க நெருப்பு தின்ற அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற நாள்காட்டியின் சாபமிந்த மறக்கமுடியா – கருப்பு ஜூலை! மனிதக் – கருப்பு மனத்தின் கொலைவெறி முற்றி முற்றும்; முடியாதோரையே அழித்த வரலாற்றுக் கொடுமை – கருப்பு ஜூலை! சுயநல வெறி சிகப்பாய் ஓடி தாமிரபரணியின் உடம்பெல்லாம் பிணங்களாய் மிதந்து – மனிதமின்மையை மனிதனே நிரூபித்த; … Continue reading →

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 34

வாழ்க்கை வெங்காயம் போல் என்றார் யாரோ; உரிக்க உரிக்க கண்ணீராம். உரிபடுவதேயில்லை இப்போதெல்லாம் நிறைய பேரின் வாழ்க்கை; வெங்காயம் என்று வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில் கண்ணீர் மட்டும் மிட்சம் போல். என்னை கேட்டால் வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள் உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள் வாழுங்கள் என்பேன்!! ———————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 33

நிறைய வீடுகளில் நிறைய அறைகள் புழக்கமின்றியே கிடக்கிறது; வீடற்று இருப்பவர்களை பற்றி அந்த அறைகளுக்கு எந்த கவலைகளும் இல்லை, தெருவில் உண்டு உறங்கி புணர்ந்து தலைமுறைகளை கடக்கும் ஒரு சாமானியனின் தேவை நான்கு சுவர் மட்டுமே என அந்த – வெற்றுக் கட்டிடமான கல் மண் கலவைகளுக்குப் புரிவதேயில்லை! ————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 32

எனக்குத் தெரிந்து கல் சுமக்கும் பீடி சுற்றும் உணவகத்தில் மேசை துடைக்கும் பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும் தேநிர்கொண்டு வந்து கொடுக்கும் சிறுவர்களின் வியர்வையில் தான் நசுக்கப் படுகின்றது நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான விதைகள்! ————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உலகமும்; ஒரு சின்ன எச்சரிக்கையும் (31)

‘எப்படியெல்லாம் செய்தால் உங்களுக்கு கோபம் வரும் என்றார்; ஒருவர் ‘ஏன்’ என்றேன் ‘சரி என்ன சொன்னால் கோபப் படுவீர்கள் என்றார் ‘எதற்கு கோபப் படவேண்டும்’ என்றென் ‘அப்போ உங்களுக்கு கோபமே வராதா’ என்றார் ‘நான் சொன்னேனா’ என்றென் ‘அப்போ கோபப் படுவீர்களா’ என்று கேட்டார் ‘படலாம்’ என்றேன் ‘கோபப் அப்டுவீங்களா?!!! கோபப் படுவீங்களா நீங்க!!!?’ ஆச்சர்யத்தில் … Continue reading →

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்