Tag Archives: கவிதைகள்

51 ஒரு தமிழனின் கனவு!!

இறந்தவர்களுக்கு இறந்த பின்பும் நிறைய கடிதங்கள் எழுதப் படுகின்றன; பதிலாய் வரும் அத்தனை கடிதத்திலும் ஒற்றை சொல்லே வருகிறது; மீண்டும் மீண்டும் போராடுங்கள்.. போராடுங்கள்..

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

50 ஒரு தமிழனின் கனவு!!

இதுவரை வீடிழந்து நாடிழந்து விடுதலை தேடி திரியும் எம் உறவுகளே; உயிரை யாருக்கு வேண்டுமாயினும் விட்டுவிடுங்கள்; விடுதலை உணர்வை – ஈழத்திற்கு மட்டுமாய் மிச்சம் வையுங்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

49 ஒரு தமிழனின் கனவு!!

ரத்தம் ஊறிய மண்ணில் ஓர் தினம் புலிக்கொடி – பட்டொளி வீசிப் பறக்கும்; இது கனவென்று நினைக்கிறார்கள் சிலர்; ஆம் கனவு தான் தமிழனின் கனவு!!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

3 முள்ளிவாய்க்காலிலிருந்து…

ஒரு நூறு தெரு தள்ளி தான் கேட்கிறதந்த சப்தம்; கண்ணீரால் யாரையோ கூப்பாடு போட்டழைக்கும் ஒரு ஓலம் அது; சுலபமாய் சொன்னால் மரணம் எனலாம், வாழ்பவன் கற்றும் தெளியாத அல்லது – கற்காத பாடம். மரணம் என்றாலே நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு மரணமின்றியே இயங்குகிறது நிறைய சதைகள்; ஆம், ஜாதி பேசி மதம் பேசி இனம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அன்பு தங்கைக்கொரு பாட்டு..

அம்மா அம்மா எனும் ஓசையை அண்ணா அண்ணா என்றழைப்பவளே.. எனை சுற்றி சுற்றி வளையவர அன்பின் – சாமி போல பிறந்தவளே.. மனசெல்லாம் பரவி குழந்தை போல வளர்ந்தவளே.. வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் ஆனவளே.. ஏனழுதேனென்று கேட்காமலெ எனக்காக அழுபவளே.. நான் பேசாத மௌனத்தில் அழுகையாய் கரைபவளே.. கட்டளையிடும் முன்னாலே செய்கையாய் சிரிப்பவளே.. சிரித்து சிரித்தே … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக