Tag Archives: கவிதை

வெளியூர் வாசிகளின் வலி (22)

இதயம் கீறி எழுதும் ரத்தம் சிந்தா வலிகளை சுமந்து தான் வளைகுடாவில் நகர்கிறது வாழ்க்கை; பிறந்த மண், வீடு, மழை, காற்று, மலர்களின் வாசமும்.. இடி, காகம், குழந்தைகளின் பேச்சு, நாய் குறைப்பு, மாடு கத்தும் ஓசையும்.. பசும்புல் கால் நனைக்கும் பனியின் ஈரம், காலை நேர தேனீர், சுட சுட ருசிக்கும் சிற்றுண்டி, வேளை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

வெற்றுப் பிணம் நாம்!!! (20)

மனதின் – நீள அகலங்களில் எத்தனையோ, கண்ணீரின் சாரல்கள்; வெளியில் தெரியாமல் உள்ளழுத்தும் வலிகளுக்கு எல்லோரும் மருந்திட்டுவிடுவதில்லை; எதையோ தேடி யாரையோ நினைத்து எங்கோ மனது கிடந்து அலையும் தருணங்களில் அழுதுவிடாத வருத்தங்கள் சுடத் தான் செய்கின்றன; வெற்றியை தலைமேல் சுமந்து எத்தனை தெருக்களில் நடந்துத் திரிந்தாலும் தோற்கும் வினாடிகள் வெற்றியின் சிகரத்தை வீழ்த்தாமலில்லை; என்ன … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 3 பின்னூட்டங்கள்

ஒரு விதவையின் நெற்றி சுடும் – பொட்டு (19)

பொட்டு ஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு; பெண்ணின் அடையாளத்தை சிவந்து காட்டும் பொட்டு; வெற்றியின் உச்சத்தை பறையறிவிக்கும் – ஒற்றை திலகம் பொட்டு; குடும்ப பெண்களின் அழகிற்கு இன்னொரு – ஆபரணம் துறந்த அழகு பொட்டு; நெற்றிக் குளிர்ச்சியில் – புத்தி திருத்தும் – செஞ் சூரணம் பொட்டு; ஸ்டிக்கரில் ஒளிந்து மடிந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

அவள் இறப்பாளென்று தெரியாமல் ஓட்டிய – மிதிவண்டி! (18)

அரைபெடல் அடித்தே உலகம் சுற்றிய காலமது! விழுந்து முட்டி உடைந்த பல தடவைக்குப் பிறகும் – மிதிவண்டி ஆசை விட்டதேயில்லை! அப்பாவின் – பழைய ராலி சைக்கிள் தாண்டி BSA SLR கனவு மிதிவண்டியாகவே கடந்துவிட்டது வாழ்க்கை! நானும் அண்ணனும் ஊர் ஊராய் சுற்றியதும்; என் ஒரே தங்கை இறந்துப் போவாளென்று தெரியாமல் அவளை மிதிவண்டியில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

வெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா) (17)

உலக ரசனையை திரும்பிப் பார்க்க வைத்த முதல் சாதனை – பணத்தை கொட்டி – இறைத்து – வாரிய பிரம்மாண்ட வியாபாரம்! சதைக்கும் தோலுக்கும் முதலிடம் கொடுத்து – முடிவில் மனசாட்சி பற்றி பேசும் மனிதர்கள் குவிந்த நவீன சந்தை! உழைப்பை – திரைக்குப் பின் மறைத்துக் கொண்டு சொகுசாக வந்தவனுக்கு – கம்பள வரவேற்பும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்