Tag Archives: கவிதை

எப்பொழுதோ எடுத்து மாட்டிய (புகைப்படம்) (16)

காலத்தை நிகழ்வுகளை நினைவுகளாய் பதிந்துக்கொண்ட படம்! சிரித்த அழுத உணர்வுகளின் நகலாய் உயிர்பெற்றுள்ள – ‘என்றோ’ வான அந்த நாள்! திரும்பக் கிடைக்காத கடந்த காலத்தை – காலப் பெட்டகம் தனக்குள் குறித்துக் கொள்ளும் வித்தை! கோழையை கூட மிடுக்காகவும் – துடிப்பாகவும் காட்டும் போலி பிரதிபிம்பம்! கடவுளையும் காந்தியையும் நம் வீடுகளுக்கு கொண்டுவந்த விஞ்ஞான … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

தாடியும் மீசையும் வெட்டு வெட்டு (15)

(நாவிதர் பிழைப்பு) உலகத்தை புரட்டி ஒரு கத்தியில் ஏந்திய வாழ்க்கை! அசைவு இருக்கை நான்கும் சுருங்கிய ஒற்றை அறையும் வந்துபோனவர்களின் – வாய் பேச்சிலுமான நகர்தல்! தீட்டிய கத்தியில் தொலைந்துப் போன சிரிப்பை ஒற்றை நாள் செவ்வாய் விடுமுறையில் தேடி பிடித்துவிடாத உழைப்பு! மீசை வெட்டுதல் தாடி வழித்தல் சிகை அலங்காரமென – கேட்டு கேட்டு; … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

மருத்துவ மனை (14)

வரிசையாய் நிற்கும் நோயாளிகளின் வலி கூட்டும் நிர்வாகம்; தெய்வம் வந்து தாங்கிடாத பொழுதுகளில் – மனிதனை உயிர்ப்பிக்கும் விஞ்ஞான வளாகம்! பணம் போட்டு நலம் காக்கும் பொதுசேவை வியாபாரம்; பணம் தாண்டியும் மனிதம் சுரப்பிக்கும் கடவுள்கள் மருத்துவர்களாக மாறிய இடம்! உயிரோடு விளையாடி – தொழில் கற்கும் ஏகாந்தம்; உயிர் கொடுத்தும் உயிர் காக்கும் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

தெருக் குழாய் (13)

குடிசைவாசிகளின் தெருக்கடவுள் உயிர் வாழ்தலுக்கான – ஏழைகளின் முதல் உணவு! வாழ்ந்ததற்காகான அடையாளத்தில் மறக்க மறுக்கும் – நினைவுச் சின்னம்! வந்து போவோருக்கு தாகம் தீர்க்கும் – எந்திர தன – கொடையாளி! வறுமை தீரா அரசின் கட்டளைக்கிணங்கி இயங்கும் – பகுதி நேர ஊழியன்; கஞ்சு சோறும் கால்ரூபாய் ஊறுகாயோடும் வயிறு நிறையும் மருந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

வீடு (12)

கோவில்களின் பிறப்பிடம் நான்கு சுவற்றாலான – மனசு! உடல் சுட்டெரிக்கும் கோபம் காமம் போட்டி பொறாமை வெற்றி தோல்வி மகிழ்ச்சி கண்ணீர் – அனைத்தும் சுமந்த மண் ஓவியம்! முயற்சியும் உழைப்பும் குழைந்துக் கொண்ட சாதனை! பண இருப்பை உலகிற்குக் காட்டிக் கொள்ளும் படோடாபம்! நிறைய பேருக்கு சுயமாக கிடைத்திடாத வாழ்நாள் கனவு! தெருவில் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்