Tag Archives: காதல்

50, தொட்டில் ஆடாத வயிறு..

தாலிச் சுமையை தாங்கித் தாங்கி வயதைத் தொலைக்கும் மாசற்றவள்; பிறக்கையில் – பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும் புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த மலரைப் போன்றவள்; எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து எள்ளி நகைப்போரை தினங் கடந்து வாழப் பழகும் – வலிமையானவள்.. செய்தக் குற்றம் தேடி தேடி செய்யா தெய்வப் பாதம் நாடி தொட்டில் ஆடும் – வயிறு … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..

வியர்வை வாசத்தில் மனம் ஈரமாகிப் போவதுண்டு., இன்றும் அப்படி அவனின் வியர்வை வாசத்தில் நனைந்துபோனேன் நான்.., இரவுகள் கிடைக்காததொரு பகல் எத்தனை ஈர்க்குமென்று ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும், அவனின் வாசம் அப்படியொரு வாசம்.., மனதை அள்ளிக்கொள்ளுமொரு மனம், மோக முற்கள் உடம்பெல்லாம் தைக்கத் தைக்க சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில் உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரியாத மனங்களிரண்டு பேசிக்கொண்ட நினைவுதனில்..

மனதிற்குள் மறக்காத முகம் அவளுடைய முகம்; இதயம் முழுதும் சுமக்கும் நினைவுகளில் சிரிக்கவும் அழவும் வைப்பவள் அவள் மட்டுமே; அவளுக்கும் எனக்கும் அன்று அப்படி ஒரு காதல் இருந்தது.. நான் அழுதால் அவள் அழுவாள் நான் சிரித்தால் அவளும் சிரிப்பாள் ஏனிப்படியிலேறி மேலிருந்து தலைகீழ்விழும் குழந்தையைப் போல மனசு மேலேறி மேலேறி மீண்டும் அவளின் காதலுள் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-12-ஆசை)

ஆசை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வில் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை)

மனிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும். வெற்றி புரிபடாத நிலையிலும், வெல்வதன் அவசியத்தை உணராமலும், தனது இயலாமையை சரிசெய்துக் கொள்ளமுடியாமல் தன்னைத்தானே கொன்றுவிட தனையறியாமலே தீர்மாணித்து தன்மீதே நெருப்பள்ளி போட்டுக்கொள்ளும் செயலே பிறர்மேல் பொறாமை கொள்ளும் செயலும். ஆனால் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்