Tag Archives: குறுங்கவிதை

அரைகுடத்தின் நீரலைகள்.. (1)

எவனெவனோ கேட்டானாம் லஞ்சம் கொடுத்தது நீயும் நானும் செய்த வஞ்சம், ஊரெல்லாம் நடக்கிறது கொள்ளை வீட்டில் சேர்த்த சுயநலத்தின் தொல்லை, காலமெல்லாம் பரிதவிக்கிறான் மனிதன் மனிதம் மறக்கப் பட்ட இரும்பன், உலகெல்லாம் கொட்டிக் கிடக்கிறது வாழ்க்கை எதற்கெல்லாமோ அஞ்சித் தவிக்கிறது மனசு, செய்யாத கொடுமைக்கு இல்லை தண்டனை செய்த தவறிலிருந்து இல்லை தப்பித்தலும், உடம்பெல்லாம் ஆசையும் … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 60

உனக்கு விரல் வத்தல் பிடிக்குமென்று நிறைய வாங்கிவந்தேன் போதுமானதை தின்று விட்டு மீதியை வீடெல்லாம் கொட்டி இரைத்தாய் அளவுக்கு அதிகமானால் எல்லாமே இப்படித் தான் என்றதில்; எனக்கும் நீ ஞானமானாய்!! ———————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 59

உனக்கு முகம் கழுவி வாசனை மாவு பூசி சாமி கும்பிட்டு திருநீரிட்டு நிலை கண்ணாடியில் தூக்கியுனை காட்டுகிறேன் என் அம்மா உன் பாட்டி எனை ‘அறிவில்லாதவன் குழந்தையை கண்ணாடியில் காட்டுகிறான் பாரென்று’ திட்டுகிறாள் நீ கண்ணாடியில் உனை பார்த்து உன் நேர்வகிடு முடியழகு பார்த்து என்னையும் பார்த்து இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதாய் நினைத்தாயோ … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 58

உன் கால்சட்டை ஈரமானதில் மண் பூசி வந்து நின்றாய். ஐயோயெனப் பதறி மேல்சட்டையும் மாற்றிவிட்டேன்; மீண்டும் நீ சென்று நீரில் மூழ்கி ஈரமாக வந்து நின்றாய். ஈரமாயிற்றே குளிருமோ என்று அதையும் மாற்றி விட்டேன் சோறெடுத்து சட்டையிலெல்லாம் பூசிக் கொண்டாய் – அதையும் மாற்றி விட்டேன் அடுத்து மீண்டும் கால் சட்டை ஈரமானது அதையும் மாற்றி … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 57

எனக்காக நீ காத்திருப்பாயோ இல்லையோ தெரியவில்லை உனக்காக நான் நிறைய காத்திருக்கிறேன் உன்னோடு மட்டுமே இருக்கிறேன் அதை உன்னைவிட்டு விலகி நின்றெழுதிய இக்கவிதை சொல்லும்! ————————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக