Tag Archives: ஞானமடா நீயெனக்கு

ஞானமடா நீயெனக்கு – 58

உன் கால்சட்டை ஈரமானதில் மண் பூசி வந்து நின்றாய். ஐயோயெனப் பதறி மேல்சட்டையும் மாற்றிவிட்டேன்; மீண்டும் நீ சென்று நீரில் மூழ்கி ஈரமாக வந்து நின்றாய். ஈரமாயிற்றே குளிருமோ என்று அதையும் மாற்றி விட்டேன் சோறெடுத்து சட்டையிலெல்லாம் பூசிக் கொண்டாய் – அதையும் மாற்றி விட்டேன் அடுத்து மீண்டும் கால் சட்டை ஈரமானது அதையும் மாற்றி … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 57

எனக்காக நீ காத்திருப்பாயோ இல்லையோ தெரியவில்லை உனக்காக நான் நிறைய காத்திருக்கிறேன் உன்னோடு மட்டுமே இருக்கிறேன் அதை உன்னைவிட்டு விலகி நின்றெழுதிய இக்கவிதை சொல்லும்! ————————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 56

எப்படியோ.. போகும்போது ஓடிவந்து டாட்டா காட்டவும்; வந்தவுடன் ஓடிவந்து ‘அப்பா’ என்றழைப்பதிலும் என் உயிரை எனக்கே மீட்டுத் தருகிறாயென என்றேனும் நீ வளர்ந்து இக்கவிதையை படிக்கும் தருவாயில் ஒருவேளை புரியலாம்!! ————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (51)

வளர்ந்து நீ பெரியவனாகி என்னென்னவோ செய்ய வேண்டுமென்றெல்லாம் எனக்கு கனவுகளில்லை, நீ நன்றாக வளர்வாய் உனக்கு நான் பலமாக மட்டுமே இருப்பேன், கடைசி வரை நீயெனக்கு; இல்லையில்லை – நான் உனக்கு அப்பாவாக இருப்பதொன்றே போதும்! —————————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (55)

ஸ்டேப்ளர் பின்னென்றாலே சிலருக்கு உடனே புரியும், அப்படியொரு சிறு கம்பி மதிய உணவிலிருந்து பல்லின் இடுக்கில் மாட்டி குத்தியது, உன் அம்மாவின் மேல் அப்படி ஒரு கோபமெனக்கு, சாப்பாட்டில் கம்பி இருந்ததால் அல்ல; அதை நீ; தின்றிருந்தால்?!! ———————————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக