Tag Archives: ஞானமடா நீயெனக்கு

ஞானமடா நீயெனக்கு (54)

உன்னை யார் கண்டாலும் எல்லோருக்கும் தான் பிடிக்கிறது; எல்லோரிடமும் கொடுத்துவிட்டு தனியாக நிற்பதில் நீ இல்லாத என் கைகள் இருக்கவே ஆசையில்லை எனக்கு! ———————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (53)

அலுவல் விட்டு இதர வேலைகள் விட்டு எல்லாம் விட்டு உனக்காக உன்னோடிருக்கும் கொஞ்ச நேரமே; எனக்கான நேரமென்று எனக்கொரு பூரிப்பு! ———————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (52)

உனக்கு பிடித்ததை மட்டுமே நான் வாங்க முயல்வேன்; உனக்குப் பிடிக்காதது என்று ஒதுக்கிய சிலதில் என் பெயரும் ஏனோ முன்னுக்கு வருகிறது, ஆம்; நிறைய வீடுகளில் நிறைய அப்பாக்களை நிறைய பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை போல்; அடிக்காத அப்பாக்களை தவிர! —————————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (50)

என்னவோ வளர்கிறாயடா நீ ஏன் நான் கண்டிக்கிறேன் என்று கூட புரிய மறுக்கிறாய்; உன் நிராகரிப்பில் நான் எத்தனை உடைகிறேன் என்பதை நீ புரிந்துகொள்ளும் காலம் வரை காத்திருப்பது – ஏதோ என் தவறிற்கான இறைவனின் தண்டனை என்று நினைத்துக் கொள்கிறேன்!! ——————————

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (49)

குழந்தைகளில் மிக சிறந்தவன் நீ என்று நினைப்பேன்; உண்மை தான் மிகச் சிறந்தவன் நீ, அதனால் தான் என்னை உனக்கு பிடிப்பதில்லை போல்! ———————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக