Tag Archives: ஞானமடா நீயெனக்கு

ஞானமடா நீயெனக்கு (48)

உனக்கு காய்ச்சலென்று முடியாமல் மடி மீது படுத்திருக்கிறாய், உன் வலி தாளாத முகம் பார்க்க பார்க்க என் ஏழேழு பிறப்பினையும் சபிக்கிறது மனசு! —————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (47)

நீ முடியாமல் ம்.. ம்.. என்று உம் கொட்டி படுத்திருக்கிறாய் உன் – ஒவ்வொரு ம்.. சப்தமும் எனை கொண்று கொன்றே பிறப்பிக்கிறதென – உன் காய்ச்சலுக்குத் தெரிவதேயில்லை! ——————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (46)

மருத்துவமனைக்குப் போகிறோம் ஊசி போடவேண்டுமென்கிறார் மருத்துவர், நீ என்னவென்று தெரியாமல் சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாய் அவரும்சிரித்துக் கொண்டே உன் புட்டத்தில் ஊசி வைத்து குத்தியெடுக்க வீல்!!!!!!!!!!!!! என கத்துகிறாய்… சரிப்பா.. சரியாகும் சரியாகும் என்கிறேன் நீ என் மார்பினை கட்டி இறுக்கி வலியை தாளாமல் கண்ணையிறுக்கி அழுத்தியதில் உன் கண்ணீர் முழுதும் நானாக கரைந்தே போனேனடா.. … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (45)

நான் உன் அம்மாவிடம் பேச தொலைபேசியில் அவளை அழைத்தேன்; நீ தொலைபேசியை அவளிடமிருந்து பிடுங்கி அப்பா அப்பா என்று கத்தினாய்; முதல் முறையாக கிரஹம்பெல்லினை மனதார பாராட்டினேன்!! ——————————————

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (44)

நீ எனை அம்மா என்பாய் – அம்மாவை அப்பா என்பாய், யாரை எப்படி அழைக்கிறாய் என்பதில் ஒன்றுமேயில்லை; இருவரையுமே அழைக்கிறாய் என்பதில் நிறைவானோம் இரண்டு பேருமே!! —————————–

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக