Tag Archives: ஞானமடா நீயெனக்கு

ஞானமடா நீயெனக்கு (43)

தின்பண்டங்களை வீடெல்லாம் இரைத்தாய், அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ அமைதியானாய்; ஓயாமல் மேலும் கீழுமாய் எகிறி எகிறி குதித்தாய் ஏக சேட்டைகள் செய்தாய் அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ அமைதியானாய்; அம்மாவின் முடி பிடித்து இழுத்தாய் தலையிலேறி அமர்ந்தாய் அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ அமைதியானாய்; எல்லாவற்றிலுமே அம்மா என் பெயரை சொன்னதும் பயந்து அமைதியானாய் … Continue reading

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

42 யதார்த்தம் கண்ணீராகவேனும் பதியட்டும்!

மனதை – சுட்டு சுட்டு பொசுக்கியதாய் ஒரு கனாக் கண்டேன்; வானம் தொடாத வாழ்க்கை வான் நிறைந்து வழிந்ததாய் ஒரு கனாக் கண்டேன்; யார் கண் பட்டதை நம்பவில்லை சுத்திப் போட்டதை ஏற்கவில்லை தெய்வம் ஒன்றே போதுமென்றதில் நான் – வீழ்ந்து துடித்த கனா கண்டேன், சொல்ல நா – எழவில்லை சொல்லி சொல்லியும் மனதாரவில்லை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (41)

நீ வயிற்றிலிருக்கும் ஐந்தாறு மாதத்தில் உன்னம்மா வயிறு தொட்டு தொட்டுப் பார்ப்பாள், அசையத் துவங்கிவிட்டாய் என்பாள், எங்களின் அத்தனை வருடக் காத்திருப்பும் பறக்க ரக்கையை விரித்துக் கொண்ட கணமது, நானும் எங்கே பார்கிறேனெனத் தொட்டுப் பார்ப்பேன், உன் அசைவுகளை என் வாழ்வின் அர்த்தமாய் அறிந்துக் கொண்ட பொழுதுகளது. இன்று – இதோ எதிரே நிற்கிறாய் கை … Continue reading

Posted in கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 39

நீ முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்து சூரியனை பார்த்து கண் கூசுகிறதென – கண்களை மூடிக் கொண்டு திறக்க இயலாமல் தவிப்பும் சிரிப்புமாய் நிற்க, நானும் அம்மாவும் உனை ‘ஹே…எனக்.. கிண்டலடிக்க, நீ கண்களையும் திறக்க முடியாமல் முடியவில்லையே எனும் இயலாமையையும் மறைக்க முயன்று சிரித்து மழுப்பிய அழகை எந்த புகைப்படத்தில் பதிந்து வைப்பேன்???? பதிய … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 38

சிலநேரம் அம்மா அம்மா என்றழுவாய்.. அம்மாவிடம் தந்தாலும் அப்பா அப்பா என்றழுவாய்., நானும் எனக்காக அழுகிறாயோ என்றெண்ணி தூக்கி மார்மேல் போட்டு தட்டுவேன் நீ இன்னும் கதறி அழுவாய்.., ஒன்றும் புரியாமல் மீண்டும் – அம்மாவிடமே தருவேன்.. என்ன செய்வதென்று புரியாமல் எப்படியாவது உன் அழையை நிறுத்தும் எண்ணத்தில் – அவள் உருக உனை அனைத்துக் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக