Tag Archives: ஞானமடா நீயெனக்கு

ஞானமடா நீயெனக்கு – 37

நடு இரவில் எழுந்து அழுவாய்; கதறுவாய்; கனவு கண்டிருப்பாயோ என்றெண்ணி சாமியறை சென்று திருநீரெடுத்து – எதையோ எண்ணி உன் நெற்றியில் வைப்பேன், உனக்கு அழை நின்றதோ இல்லையோ – எனக்கு என்னம்மா அப்பா இட்டதெல்லாம் நினைவுக்கு வரும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 36

நான் யாரை பார்த்தாலும் என் பிள்ளை இப்படி என் பிள்ளை அப்படி என்று என்னென்னவோ சொல்கிறேன்; நீ நாளை வளர்ந்த பிறகு உன்னப்பா – இப்படி இப்படி என்றெல்லாம் உனக்கு நினைவிலிருக்குமா!!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 35

உனை – சற்று வளர்ந்ததும் கடைக்கு அழைத்துச் சென்றேன், நீ குழந்தை பொம்மை எடுத்தாய் வீடெடுத்தாய் வண்டிகள் எடுத்தாய் நாய் கரடி பொம்மைகள் எடுத்தாய், மிதிவண்டி சொப்புகளென – என்னென்னவோ எடுத்தாய், எல்லாவற்றையும் பார்த்து துள்ளி குதித்தாய் – சரி வைத்துவிட்டு வா போகலாமென்றால் முடியாதென்று அழுதாய் – அவைகளை எல்லாம் பிடுங்கி கடையிலேயே வைத்துவிட்ட … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 34

எப்படியோ – வேண்டாமென்று நினைத்து நினைத்தே எதையேனும் உனக்கு வாங்கி வரும் பழக்கத்தை உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன். வேறென்ன செய்ய – அப்பா என்று நீ ஓடிவந்து என் கையை விரித்துப் பார்க்கையில் ஒன்றுமில்லாது – ஏமாந்து போவாயோ என மனசு உடையும் வலி – வாங்கி அரும் அப்பாக்களுக்கே புரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 33

உன் காதலி கூட உனக்கு – இத்தனை முத்தம் கொடுப்பாளோ என்னவோ; அத்தனை முத்தத்திற்கு பிறகும் உனையே நினைக்கிறது மனசு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்