Tag Archives: தமிழர் விடுதலை

12 ஓ………. உலக தமிழினமே..

பள்ளிக்கூடத்து புத்தகங்கள் நெருப்பில் விழுந்த இதழ்களாகவே பாதி கருகியும் கருகாமலும் ஈழத்து புதை குழிகளில்; வெறும் கணக்கு சொல்கிறார்கள் சண்டாளர்கள் – ‘நான்கு ‘பாடி’ கிடைத்ததாம்!! —————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

11 ஓ………. உலக தமிழினமே..

புதைகுழிகளை தோண்ட அரசானையாமே ? எங்கேனும் என் இறந்த மகனின் அல்லது கணவனின் எலும்புத் துண்டு கிடைக்குமாயின் கொடுத்து செல்லுங்கள் – சிங்கள நாய்கள் தெருவோரம் வந்தால் எடுத்து வீசலாம் – ஏதேனும் இரண்டு தமிழச்சிகளாவது மிட்சப் படட்டும்!! ———————————————-

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

10 ஓ………. உலக தமிழினமே..

கர்ப்பிணி பெண்களின் வயிறு கிழித்து தமிழனென்பதால் சிசுவை கூட கொண்றுபோட்ட சிங்களரா தமிழரை காப்பர்? ஓ………. உலக தமிழினமே வெட்கம் கொள்ளாதே அவன் காலுக்கு செருப்பினும் கேவலமாக எண்ணப் படுகிறோம் இங்கு; ஈழத்தில் முடிந்தால் சற்று கோபப் படு; யாரேனும் இருக்கிறீர்கள் என்றாவது தெரிந்துக் கொள்ளட்டும் சிங்களவர்!! ————————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

9 கேட்ட கதையும்; கேட்காத பாடமும் – கரும்புலிகள்!!

கரும்புலிகள் கதை கேளு மரணமெல்லாம் தூசி பாரு, ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு; கரும்புலிகள் உதிரம் பூத்து கடல்கூட அழுது சிவந்தது பாரு – உயிரும் வருடமும் பல; பலிகொடுத்தும் ஈழம் மட்டும் – இலங்கையாச்சி பாரு; மில்லர் போல பலபேரின் இலட்சியக் கனவு சாமாதியில் பாரு – கமலுக்காக ஒரு … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

8 பிணமென்றே பெயர் வைத்தேன்

   பிணங்களின் எரியும் புகையில் புகுகிறது பள்ளி சீருடைகள்;   பிணங்களின் அழுகிய நாற்றத்தில் மறந்தன மரண பயம்;   பிணங்களின் முறிந்த உறுப்பில் முடங்கின உயிர் பறித்த வலி;   பிணங்களின் தெருவோர குவியலில் அறுந்தன உயிரின் ஆசை;   பிணங்களின் பிணமென்னும் பெயரில் கிடக்கின்றன எம் – வீரமும் உறவுகளும்;   பிணமென்றே பெயர்வைத்தேன் வேறென்ன … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்