Tag Archives: தமிழ்

யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..

உறவுகளுக்கு  வணக்கம், யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக போற்றப் படுபவர்களின் படைப்புகள் தினக்குரல் இதழில் வெளியிடப் படுகிறதென்பதை தெரிவிக்க வேண்டி, நம் படைப்புகள் வந்துள்ள ஒரு பக்கத்தை தங்களின் பார்வைக்கென இணைத்து, யாழ்தேவியில் இணைந்து பயன் பெறவும், தினக்குரலுக்கு நன்றியறிவிக்கும் முகமாகவும், இப்பதிவு இடுவதோடு; ஈகரையின் கவிதை மற்றும் கட்டுரை போட்டிக்கான இணைப்பையும் கீழே கொடுத்து மகிழ்கிறோம். http://www.yaaldevi.com/?country=உலகம்&countryID=0 … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

35 கவிதையில்லை; ஒரு கடிதம்!

ஒவ்வொரு புள்ளியிலாய்  இதயங்கள் சந்தித்தே – தூர  விலகி நிற்கின்றன.   எனக்கும் நேரிடுகிறது அந்த நெருங்கி பிரியும் புள்ளியின் நிறைய வலிகள்.   எல்லோரையும் காதலிக்க ஆசை எல்லோரையும் கட்டிக் கொள்ள ஆசை கட்டல் ஏன் காமத்திற்கா?   காமம் அறுக்காத உணர்வுகள் பொங்கியெழுந்த ஆசையின் நிர்வாணத்திற்கு – உடல் என்னும் சோறு போடவா??? … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

7 சுட்டு எரிந்ததொரு காடு..

யார் மரணமும் யாரையுமே நோகவில்லை  முடிவில் – முள்ளிவாய்க்காலை விழுங்கி சுடுகாடாய் கனத்தது உலக தமிழரின்; கல்மனசு! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6 சுட்டு எரிந்ததொரு காடு..

போர் போரென கதறிய கத்திய அவலகுரலில்; செவிடாகிப் போயினர் உலகத்தினர், ஊமையாகிப் போயினர் தமிழர்கள்! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

5 சுட்டு எரிந்ததொரு காடு.. (64)

ஆணும் பெண்ணும் குழந்தையுமென – கொன்று குவித்தவனுக்கு பெயர் போர்வீரனும், கொள்ளப் பட்டவனுக்குப் பெயர் தீவிரவாதியுமெனில்,   சொன்னவனை இனி சிங்களனென உரைப்போம்! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக