Tag Archives: துளிப்பா

ஆக, அவனோட மரணம்; அவனாலேயே அவனுக்கு நிகழ்கிறது!!

ஆற்றுமணல் வீடு கட்ட மட்டுமாச்சி, ஆறு ஏரி குளமெல்லாம் பாடத்தில் படிக்க மட்டுமாகுது, சோறு குழம்பு பதார்த்தம் கூட பேசனாயி போச்சி, பேசினாலும் நடந்தாலும் ஸ்டெயிலென்கிறான் மனிதன், செத்தாலும் மாலை போட்டு வீடு கட்டி அழுவுறான்; குடிச்சிப்புட்டு ஆடுறான்; சோறு கொஞ்சம் குறைந்தாலும் பொண்டாட்டிய அடிக்கிறான் போதை தெளிந்து விடியும் போது பேன்ட் சட்டையில் திரியுறான் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

என் முகிலுக்கு ஓர் தங்கை பிறந்திருக்கிறாள்… (16-10-2010)

ஒரு பிஞ்சிப் பூவில் நெஞ்சு பூத்த சித்திரம் கண்டேன், நாக்குதட்டி தட்டி என் இதயம் – அதன் சிரிக்காத சிரிப்பால் நிறையக் கண்டேன், சிப்பி திறந்ததும் முத்து சிரித்தது போல் – அந்த சிறுவிழி திறந்து கருவிழி எனை காணக் கண்டேன், காற்றில் ஆடும் மலர்களின் மகரந்தமாய் – என் பேச்சில் ஆடும் அந்த துள்ளும் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 52 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு 65

நீ மூத்தவன் ஆனதையும் நாங்கள் இரண்டாம் முறையாய் – பெற்றோர் ஆனதையும் – இன்று தெரிந்து கொண்டு அவள் வயிற்றில் கை வைத்து – செல்லமே நல்லா இருக்கீங்களா……….’ என்று புன்னகைத்ததும் – நீ இங்கும் அங்கும் திரும்பி பார்த்துவிட்டு உனை கொஞ்சும் அந்த வார்த்தையில் – நான் யாரை கொஞ்சுகிறேனோ என்று பார்த்து விட்டு … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 64

அது எப்படியோ – மூத்த பிள்ளை இளைய பிள்ளையால் சலித்துவிடும் என்கிறார்கள்; எனக்கு நூற்றியோர் பிள்ளைகள் பிறந்தாலும், நீயும் சலிக்கமாட்டாய் – மீதம் – நூறு பிள்ளைகளையும் சலிக்கவிட மாட்டாய்’ என்று தெரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 63

ஒவ்வொரு பெற்ற வயிறும் வளர்த்த தோளும் தன் குழந்தைக்கான அன்பையும் ஆசைகளையும் எழுதிவைக்க நாட்குறிப்பினை தேடுவதில்லை; தேடி வைத்திருந்தால் – ஒவ்வொரு வீட்டிலும் ஞானமடா நீயெனக்கும் – ஞானமடி நீயெனக்கும் – நிறைய கனத்திருக்கும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக