Tag Archives: துளிப்பா

அரைகுடத்தின் நீரலைகள் – 23

ஒரு உயிரொழுக பூக்கிறது அன்பு; இல்லாத மனசிலிருந்து. மனசெனில்’ அறிவு தாண்டி ஆத்மா நிறையுமிடமோ தெரியவில்லை. நான் கேட்டது கிடைத்த சிரிப்பைவிட வேண்டியதை இழந்த துக்கத்தில் – மனசை அடையாளாம் காணாமல், உடம்பெல்லாம் எரியும் வேதனை தீயில் மனசெங்கோ அன்பின் குவியலாக இருப்பதாகத் தான் தெரிகிறது; எனக்குள்ளும்! ஒரு பார்வையில் பரிதவித்து முத்தத்தில் நிறைந்து பிரிவில் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 22

மனதில் கனக்கின்றன சில முகங்கள், என்னால் நேரே அவர்களை பார்த்து பேசிட இயலாத பழைய முகங்கள். ஆனால் இப்பொழுது முடிகிறது அனிச்சையாய் அது நிகழ்கிறது முகம் பார்த்து இரண்டு கண்களை நேராக பார்த்து மட்டுமே பேசுகிறேன் நான்; ஆனால் அன்று முடியாததன் காரணம், இன்றும் நிறைய பேர் நேராக பார்த்துப் பேச விருப்பம் கொள்ளவோ இயலாமலோ … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அரைகுடத்தின் நீரலைகள் – 21

எங்கெங்கோ சுற்றி மீண்டுமாய் நான் வந்து நிற்குமிடம் ஒன்று கடவுள் மற்றொன்று மரணம்; இல்லை இல்லை கடவுள் இல்லை எனில் மரணமாக மட்டுமே போ, மரணத்தில் மிஞ்சும்; கடவுள் இருப்பதான பயம் அல்லது மரணத்தில் மரணிக்கும் கடவுள் இருக்கும் இல்லாத நம்பிக்கை!! ————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 20

மனதை உன்னால் திறந்துவைத்திருக்க இயலுமெனில் கோவிலொன்றும் பெரிதில்லை மூடிக் கொள்! ————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 19

உலகம் கொட்டக கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை காண்பதற்கும் ஒரு கண் வேண்டும் தெளிவெனும் கண்; அல்லாது யாருக்கும் தெரியாதெனத் தோண்டும் குழிகள் நாளை நமக்காகவும் திறந்தே இருக்கும்! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக