Tag Archives: பிரிவுக்குப் பின்

பிரிவுக்குப் பின் – 76

உன் – கால் கொலுசும்.. கை வளையல்களும்.. சொல்லிடாத – சேதி கேட்டும்; சொன்ன – இரவுகளை நினைத்தும் தான் நகர்கிறது – வாழ்வினிந்த – அர்த்தமற்ற நாட்கள்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 75

என்னோடில்லாத கணங்களில் – மரணம் வந்தென்னை பாதி மென்று விடுகையில், தடுத்துக் காப்பாற்றி விடுகிறது; நீ – எப்பொழுதேனும் அனுப்பும் கடிதம்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 74

உனை விட்டுப் பிரிந்து வருடம் ஒன்றை கடந்த பின்பும் – இன்று என் சட்டையை கழற்றினாலும் அங்கங்கு சற்று – முகர்ந்துக் கொள்வேன்; எங்கேனும் உன் வாசம் மிச்சமிருந்து விடாதா!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 73

இப்பொழுதெல்லாம் நான் – தனியாகத் தான் – இருக்கிறேன்; ஆம்! நீயில்லாத உலகத்தோடு நான் பேசுவதேயில்லை!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 72