Tag Archives: பிரிவுக்குப் பின்

பிரிவுக்குப் பின் – 71

விழுகின்ற ஒரு சொட்டுக் கண்ணீருக்குத் தான் வருடங்களிரண்டின் வருத்தம் புரியும்; உன்னை காணமல் – பேசாமல் -தொடாமல் – தவிக்கும் வாழ்க்கைக்கு தான் நொடியில் கூட நான் இறப்பது தெரியும்! தொடத் தொட உன் தேகமினிப்பது – கனவிலும் நினைவிலும் மட்டுமென யாருக்குத் தெரியும்; பட படவென உடையும் இதயம் தானிங்கே..’கவிதையென்பது’ உனக்கும் எனக்கும் இடையே … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 70

காற்றினை – கிழித்துக் கொண்டு வந்து என்னை தொடும் உன் கண்ணீருக்குத் தெரிவதில்லை; உன் அழுகையில் அதிகம் வலிப்பது என் இதயம் தானென்று!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 69

இதயம் – வலிக்கிறதென்பதே தெரியாமல் தான் நீ கடந்துக் கொண்டிருக்கிறாய் என்னை; கடை தூரம் சென்று திரும்பிப் பார்க்கையில் -ஒருவேளை நான் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 68

வாழ்க்கையில் உணரும் ஆயிரம் – அர்த்தங்களுக்கு இடையில் மனம் எங்கோ.. யாரையோ.. எதற்கோ… தேடிக் கொண்டு தான் இருக்கிறது; நீ- மட்டும் தான் அடிக்கடி – இடையே வந்து என் தேடலின் அர்த்தத்தை நீயென்றுரைக்கிறாய்!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 67

உன் – ஈரமில்லா SMS முத்தத்தில் தான் நனைந்து நகர்கிறது என் – சிரிப்பினை மறந்த வெளிநாட்டு வாழ்க்கை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக